தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு ஒரு பக்கம் பாரதி கண்ணம்மாவை தேடி அவள் 10 வருடத்திற்கு முன்னர் தங்கி இருந்த ஊருக்கு செல்ல அங்கு கண்ணம்மா வரவில்லை ஒரு வேலை வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் என சொல்லி அனுப்புகின்றனர்.
இந்த பக்கம் கண்ணம்மா ஸ்கூலில் பிள்ளைகளை சேர்க்க அப்போது அப்ளிகேஷன் அப்பாவின் பெயர் இருக்கும் இடத்தில் ஹேமா லட்சுமி என இருவரும் கண்ணம்மாவின் பெயரை எழுத அது குறித்து பள்ளி முதல்வர் கேட்க எங்களுக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் எங்க அம்மா தான் என சொல்கின்றனர்.
பின்னர் பாரதி கண்ணம்மா எங்கே போனார் என தெரியாமல் சோர்ந்து போய் உட்கார்ந்து இருக்க சௌந்தர்யா போன் போட்டு நீ வீட்டுக்கு வந்து நமக்கு தெரிஞ்ச போலீஸ்கிட்ட சொல்லி தேடலாம் என சொல்ல பாரதி வந்தால் கண்ணம்மா மற்றும் குழந்தைகளோடு மட்டும்தான் வருவேன் என சொல்லி ஃபோனை வைக்கிறார்.
அடுத்து கண்ணம்மா தங்கி இருக்கும் ஊரில் வட்டிக்கு காசு கொடுக்கும் ஒரு ரவுடி எதற்காக கண்ணம்மாவை பார்த்து அவள் மீது ஆசை கொள்கிறான். யார் அவள் ஊருக்கு புதுசா இருக்கு எனக்கு விசாரிக்க அவனது நண்பர்கள் கண்ணம்மாவின் அப்பாவை பற்றி கூறி உனக்கே முறை பொண்ணு தான் என சொல்ல அப்போ நம்ம முறை செஞ்சிட வேண்டியதுதான் என கூறுகிறார்.
பின்னர் பாரதி என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் இருக்க அப்போது கண்ணம்மாவின் சித்தியின் தம்பியின் மொபைலுக்கு கண்ணம்மா தங்கி இருக்கும் ஒரு லொகேஷன் வாட்ஸ் அப்பில் வர கண்ணம்மா இங்குதான் இருக்க வேண்டும் என தேடிக் கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
