Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷர்மிளாவால் மகிழ்ச்சியில் சௌந்தர்யா.. ரோஹித்தால் காத்திருந்த ஷாக்.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ஷர்மிலா சௌந்தர்யாவுக்கு போன் போட்டு வெண்பாவுக்கு வரும் வியாழக்கிழமை திருமணம் பங்ஷன் வைத்திருப்பதாக கூறுகிறார். இதைக் கேட்ட சௌந்தர்யா மகிழ்ச்சியடைகிறார். மேலும் நாம இருவரும் அக்கா தங்கச்சி மாதிரி நீ வா போன்னே பேசலாம் என ஷர்மிளா கூறுகிறார். இந்த ஃபங்ஷனுக்கு நீங்க கண்டிப்பா குடும்பத்தோட வரணும் என கூறுகிறார். சௌந்தர்யாவும் நிச்சயம் குடும்பத்தோட வந்து முன்னாடி நின்னு நடத்திக் கொடுக்கிறோம் என கூறுகிறார்.

ஆஸ்பத்திரியில் கண்ணம்மா பாரதியின் ரூமுக்குச் சென்று ஹேமாவை எதுக்கு அவள் பண்றீங்க என கேட்க எல்லாத்துக்கும் காரணம் நீதான் என பாரதி கூற நான் ஹேமாவிடம் எதுவும் சொல்லவில்லை. ஹேமாவிடம் ஒழுங்கா பேசுங்க வீட்டுக்கு நேரத்தோட போங்க அவ உங்கள ரொம்ப மிஸ் பண்றா என கூறுகிறார்.

இந்த பக்கம் வெண்பா பேசியல் செய்து கொண்டிருக்க இந்த நேரத்தில் மாயாண்டி போன் செய்கிறார். உங்களைப் பற்றி தன்னிடம் இருக்கும் அனைத்து ஆதாரத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன் அதற்கு நீங்கள் லைப் டைம் செட்டில்மெண்ட் 25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறுகிறார். இதனால் வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இதெல்லாம் ஒட்டுக்கேட்ட ரோஹித் மாயாண்டி அடித்து விரட்டி கட்டிப்போட்டு வீட்டிற்கு கூட்டி வருகிறார்.

ஆனால் இந்த விஷயத்தை சொல்லாமல் கதவைத் தட்ட வெண்பா எதையெதையோ சொல்லி ரோஹித்தை வெளியே அனுப்பி கதவை சாத்துகிறார். பிறகு மாயாண்டி போனிலிருந்து ரோஹித் பேச வெண்பா அதிர்ச்சி அடைகிறார். பிறகு மாயாண்டி வீட்டிற்குள் அழைத்து வந்து அவர் தம்மிடம் இருந்த ஆதாரங்களை அழித்துவிட்டதாக இனி உங்களது பக்கமே தலை வைக்க மாட்டேன் என கூறி மன்னிப்பு கேட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இதனால் வெண்பா சந்தோஷப்பட இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update