தமிழ் சின்னத்திரையில் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடு ஹேமா லட்சுமி மற்றும் பூஜா என மூவரும் விளையாடிக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் பாரதியை பிடிக்கும் ஹேமா நான் பூஜாவை பிடித்து விட்டேன் என சந்தோஷமாக குதிக்க பூஜா இல்ல டாடி என பாரதி குரல் கொடுக்க ஹேமா கண் திறந்து பார்த்து கோபப்படுகிறார்.
ஹேமாவும் லட்சுமியும் உங்களுடைய தொந்தரவு இருக்கக்கூடாது என்று தான் இவ்வளவு தூரம் பிரிந்து வந்தோம் இங்கேயும் வந்து தொந்தரவு பண்றீங்க என திட்டுகின்றனர். ஹேமா எங்களுக்காக ஒரு உதவி பண்ண முடியுமா என கேட்க பாரதி என்னன்னு சொல்லு அம்மா எதுவாக இருந்தாலும் பண்றேன் என கேட்க தயவு செஞ்சு இந்த ஊரைவிட்டு போய்டுங்க என கூறுகின்றனர்.
அதன் பிறகு இருவரும் வீட்டுக்குள் போய் கண்ணம்மாவிடம் பாரதி என்று பேசிய விஷயத்தை சொல்ல கண்ணம்மா வெளியே வந்து பாரதியிடம் கோபப்பட பாரதி சிரித்து வெறுப்பு ஏற்றுகிறார். என்ன இந்த ஊரை விட்டு ஒதுக்கி வச்சிருக்காங்க என்கிட்ட பேசறவங்களையும் இந்த ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் இப்போ நீதான் வந்து பேசிகிட்டு இருக்கேன் உன்னையும் இந்த ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டால் குழந்தைகளையும் ஸ்கூல்ல இருந்து நிறுத்திடுவாங்க, நாம எல்லாரும் சேர்ந்து சென்னை போக வசதியா இருக்கும் என சொல்ல கண்ணம்மா கோபப்பட்டு உள்ளே சென்று விடுகிறார்.
பிறகு உள்ளே இருந்து பேப்பரில் ஐ லவ் யூ டாடி நம்பிக்கையோடு இருங்க என இரண்டு லெட்டர் தூக்கி எறியப்படுகிறது. இதை எடுத்து படித்த பாரதி ஹேமா தான் எழுதி இருக்க வேண்டும் என நினைத்து சந்தோஷப்படுகிறார். அதன் பிறகு கணபதி மார்க்கெட்டில் மளிகை சாமான்களை வாங்கச் செல்ல யாரும் எதுவும் தராமல் தொலைத்து அடிக்கின்றனர்.
இருவரும் பசியில் துடித்துக் கொண்டிருக்க அப்போது சௌந்தர்யா போன் போட பாரதி கணபதி விதவிதமா சமைச்சு கொடுத்து சாப்பிடுவது போல நடித்து பேசி சமாளிக்கிறார். சௌந்தர்யா போனை வைத்ததும் இருவரும் பசியில் கதறுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.