தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சிகிச்சை முடிந்து பாரதியை பார்க்க செல்கிறார் கண்ணம்மா. மருந்து மாத்திரை கொடுத்த அவர் சிகிச்சைக்கு பணம் வேண்டாம் என கூறுகிறார். ஆனால் அதை எல்லாம் கேட்காமல் கண்ணம்மா பணத்தை கொடுத்து விட்டு வருகிறார்.
இந்த பக்கம் வீட்டுக்கு வந்த கண்ணம்மாவை பார்த்து லட்சுமி மற்றும் வடிவுகரசி ஆகியோர் பதறுகின்றனர். அதன் பின்னர் கண்ணம்மா நடந்ததை கூறுகிறாள். அதைப்போல் ரத்து கரையோடு வீட்டுக்கு போன பாரதியை பார்த்த எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர் என்னாச்சு என கேட்க யாரோ ஒருவர் தன்னை கத்தியால் குத்த வந்ததாகவும் அப்போது ஒரு பெண்மணி காப்பாற்றியதாக சொல்கிறார். யார் அந்த பெண்மணி போன் நம்பர் குடு வீட்டுக்கே வரவைத்து நன்றி சொல்லணும் என சௌந்தர்யா கேட்டு நச்சரிக்க கடைசியில் பாரதி அது வேறு யாருமில்லை சமையல் அம்மா தான் என கூறுகிறார்.
பிறகு பாரதி மேலே சென்று விட சௌந்தர்யாவிடம் சமையல் அம்மாக்கு போன் பண்ணி நன்றி சொல்லு என கூறுகிறார். பிறகு ஹேமாவும் கண்ணம்மாவுக்கு போன் செய்து நன்றி கூறுகிறார்.
அதன் பின்னர் ஹேமா கீழே இருந்து மேலே வரும் சமயத்தில் அவரை பார்த்து சௌந்தர்யா, அகிலன் மற்றும் அவருடைய அப்பா ஆகியோர் கண்ணம்மாவை பற்றி புகழ்ந்து பேசுகின்றன. கண்ணம்மா மட்டும் வரலைன்னா பாரதிக்கு என்ன ஆகியிருக்கும் என கூறுகின்றனர். கண்ணம்மா மாதிரி ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும் என சௌந்தர்யா கூறுகிறார். இதை எல்லாம் கேட்ட ஹேமா சமையல் அம்மா ரொம்ப நல்லவங்க, அவங்க மாதிரி ஒருத்தர் அப்பாவுக்கு துணையா வரணும் என நினைக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.