தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் எல்லோரும் கண்ணம்மாவிடம் பொருளை வாங்காமல் திருப்பி அனுப்பிய நிலையில் ஏதோ நடந்திருக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல என வருத்தத்தோடு கண்ணம்மா வீட்டுக்கு வர தாமரை கண்ணம்மா புலம்புவதை பார்த்து கடை வீடு வரைக்கும் கண்ணம்மா பற்றி தப்பான பேச்சு போயிருக்கு என புரிந்து கொள்கிறார். இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண்ணம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார் தாமரை.
அடுத்ததாக மறுநாள் போகி பண்டிகை கொண்டாடும் போது எதற்காக கொண்டாடுகிறோம் என குழந்தைகள் கேட்க பழைய பொருட்களை எரித்துவிட்டு புதிய பொருட்களை வாங்க என கண்ணம்மா சொல்ல பாரதி சிரித்து அது அப்படி இல்லை, நம்மிடம் இருக்கும் விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு எல்லோரிடமும் அன்பாகவும் அக்கறையாகவும் பழக வேண்டும் என்பதற்காகத்தான் போகி பண்டிகை கொண்டாடுவதாக கூறுகிறார். மேலும் நான் பல செய்யலாம் மறந்துட்டேன் என பாரதி சொல்ல கண்ணம்மா கோபப்பட்டு உள்ளே எழுந்து செல்கிறார்.
அதன் பிறகு ஊர் தலைவர் பாரதியிடம் வந்து நீங்க எதுக்கு இங்க இருந்து கஷ்டப்படணும் உங்க ஊருக்கு போயிடலாமே வேண்டான்னு சொல்ற பொண்ணு எதுக்கு? நீங்க வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க என்ன சொல்ல பாரதி கண்ணம்மாவோட தான் ஊருக்கு போவேன் என உறுதியாக கூறுகிறார்.
அடுத்து ஊரில் குஸ்தி போட்டி நடக்க அதில் செல்லப்பாண்டி தொடர்ந்து ஜெயித்து வருகிறார். பாரதியும் கணேசனும் டீ குடிக்க செல்ல அப்போது டீக்கடையில் காணாமல் பற்றி தவறாக பேரில் அவர்கள் பாரதி வந்தது மறைமுகமாக கண்ணம்மாவை பற்றி தவறாக பேச பாரதி அது புரியாமல் இருக்கிறார். அதன் பிறகு கணேசன், பாரதியை நீங்க வாங்க வீட்டுக்கு போகலாம் என அழைத்து வந்து விடுகிறார்.
பிறகு கண்ணம்மாவின் அப்பா யாரிடமும் சண்டை போட்டு சட்ட கிழிந்து சேறும் சகதியுமாக வீட்டுக்கு வர கண்ணம்மாவும் தாமரையும் பதறிப்போய் என்னாச்சு என கேட்க ஊர் ஜனங்க நாக்குல நரம்பில்லாமல் என்னென்னமோ பேசுறாங்க, அப்பா எது சொன்னாலும் உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்லுவேன்னு உனக்கு தெரியும் இப்ப சொல்றதயும் கேளுமா என்ன சொல்ல கண்ணம்மா என்ன என்று கேட்க நீ உன் புருஷனோட சேர்ந்து வாழு என்று சொல்ல கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.