தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த வெண்பா இடம் அவருடைய அம்மா பாரதி என்ன சொன்னான் என கேட்க தன்னுடைய அம்மாவிடம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என சொன்னதை சொன்னால் வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்வாங்க. ஆகையால் அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய கூடாது என பாரதி ஓகே சொல்லிட்டாள் உன்கிட்ட மன்னிப்பு கேட்டான். விவாகரத்து முடிந்ததும் அடுத்த நாளே கல்யாணத்த வச்சிக்கலாம் என சொல்லிட்டான். விவாகரத்து ஆனதும் முதலில் வீட்டுக்கு வந்து உன்னிடம் பேசுவதாக சொன்னார் என கதை கதையாக அளக்க ஷர்மிலா நீ சொல்வதெல்லாம் பொய். பாரதி இந்த ஜென்மத்துல உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் நீ முதல்ல கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வர சொல்லி இருப்பான். அதுதானே நடந்தது? ஒரு வேளை பாரதி கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருந்தா நீ அடுத்த நிமிஷமே எனக்கு விஷயத்தை சொல்லி இருப்ப, ஆனால் நீ அப்படி சொல்லல அப்பவே நான் தெரிஞ்சுக்கிட்டேன் என கூறுகிறார். இதனால் வெண்பா அதிர்ச்சி அடைகிறார். ஒழுங்கா நான் பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க என சொல்கிறார்.
இந்தப் பக்கம் லட்சுமி கண்ணம்மா ஸ்கூலில் இருந்து அழைத்து வருவது பேப்பரில் பாரதிக்கு விருது கொடுக்க போவதாக செய்தி வந்து இருப்பதை பார்த்து லட்சுமி கண்ணம்மாவை அழைத்துக்கொண்டு பாரதிக்கு வாழ்த்து சொன்ன மருத்துவமனைக்கு செல்கிறார். செல்லும் வழியில் செடியில் இருந்த பூக்களைப் பறித்துக் கொண்டு செல்கிறார். மருத்துவமனையில் எல்லோரும் பெரிய பொக்கே கொடுத்து வாழ்த்து சொல்வதை பார்த்த லட்சுமி பூக்களை மறைத்துக்கொண்டு அழைத்துச் செல்கிறார். இதை கவனித்த பாரதி எல்லோரும் கொடுத்ததை விட இது தான் எனக்கு ஸ்பெஷல் உன் கையால் பிடித்துக் கொண்டுவந்து கொடுத்தது என சொல்லி லட்சுமியை சந்தோஷப்படுகிறார். பிறகு லட்சுமி அண்ணமாலை அழைத்து பாரதிக்கு வாழ்த்து சொல்ல சொல்ல கண்ணம்மாவும் வாழ்த்துக் கூறுகிறார்.
இந்த பக்கம் பாரதி தன்னை ஏமாற்றி விட்டதாக கடுப்பில் இருக்கும் வெண்பா மனதை ஆற்றிக் கொள்ள விதவிதமாக அசைவ உணவுகளை சமைத்து வை என சாந்தியிடம் சொல்ல அவரும் சமைத்து வெண்பாவிற்கு பரிமாறுகிறார். வெண்பா சிக்கன் பீஸ் எடுத்து வாயில் வைக்கும் நேரத்தில் அவருடைய அம்மா வந்து இனிமேல் இப்படி எல்லாம் சாப்பிடக்கூடாது. உனக்கு நான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி விட்டேன் டயட் ஃபாலோ பண்ண வேண்டும். குறைந்தது 10 கிலோ எடையை குறைக்க வேண்டும் என சொல்லி இனிமேல் நான் சமைத்ததை தான் சாப்பிட வேண்டும் என கூறுகிறார்.
பச்சைக் காய்கறிகளை சாலட் செய்து அதை என்பதற்கு வலுக்கட்டாயமாக ஊட்டி விடுகிறார். இதனால் வெண்பா தவியாய் தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.