தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமும் சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் சக்தி நீங்க தைரியமா ஆப்பரேஷன் பண்ணுங்க எதைப் பத்தியும் கவலைப் படாதீங்க என சொன்னதை நினைத்து ஆபரேஷனை தொடங்குகிறார் பாரதி.
ஊர் முழுவதும் பாரதி ஆபரேஷன் செய்து சக்தியை உயிர் பிழைக்க வைப்பது பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். நல்லபடியாக திட்டமிட்டபடி இதயத்தை சென்னை கொண்டு வந்து சக்தி உயிரை காப்பாற்ற வேண்டும் என ஊர் மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பத்திரிக்கைகள் பரபரப்பாக இந்தச் செய்திகளைப் பற்றிய பிரேக்கிங் நியூஸ் ஆக கூறி வருகின்றனர். இந்த நிலையில் கண்ணம்மா சொன்னதுபோல விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் சூறாவளி காற்று சுழன்று அடிக்க தொடங்குகிறது.
இந்த நேரத்தில் கணேசன் வெளியில் வர பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்து மழை பெய்கிறது இந்த நேரத்தில் இதயத்தை சென்னை கொண்டு செல்வது என்பது சாத்தியமா என கேட்க அவர் திட்டமிட்டபடி இதயத்தில் சென்னை கொண்டு செல்வோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என வீரவசனம் பேசி விட்டு செல்கிறார். பிறகு கண்ணம்மாவும் சந்தித்து நீ சொன்ன மாதிரியே முதல்வர் அது இப்போ உனக்கு குலுகுலுனு இருக்குமே என கூறுகிறார்.
இந்த நேரத்தில் அவருக்கு சாப்பர் நிறுவனத்தில் இருந்து போன் கால் வருகிறது. விக்ரவாண்டி பகுதியில் கடுமையான சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் ஹெலிகாப்டரை இயக்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இதயத்தை வேறு வழியாக சென்னை கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள் என கூறி விடுகின்றனர். இந்த தகவலை கேட்ட பத்திரிக்கையாளர் ஒருவர் இதை பிரேக்கிங் நியூஸாக கூறிவிடுகிறார். இதனால் அனைவரும் கடுமையாக அதிர்ச்சி அடைகின்றனர்.
அதன் பின்னர் கணேசன் பாரதியை வெளியே அழைத்து கடுமையாக மழை மற்றும் சூறாவளி காற்று வீசுகிறது இதனால் சாப்பரை இயக்க முடியாது என கூறிவிட்டனர் ரோடு வழியாக கொண்டு செல்ல வேண்டும் ஆனால் அதற்கான ஏற்பாடு எதுவும் செய்யவில்லை என்ன செய்வது என தெரியவில்லை என கூறுகிறார். முதலில் விக்ரமுக்கு அங்களிடம் பேசுங்கள் ரோடு வழியாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என கூறுகிறார்.
பிறகு கணேசன் விக்ரமுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவர் நீங்கள்தான் முதலில் இதை எல்லாம் யோசித்து இருக்கணும் கண்ணம்மா அப்போது இந்த விஷயத்தில் செல்லும்போது அவளை பேச விடாமல் தடுத்து விட்டீர்கள் என திட்டி தீர்க்கிறார். சீக்கிரம் ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என சொல்கிறார்.
கடுமையான காற்றும் மழையும் வீசுவதால் கண்ணம்மா என்ன செய்வது என தெரியாமல் பதற்றத்தோடு இருக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.