தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா பாரதியுடன் புகைப்படங்களை பார்த்து அழுது கொண்டிருக்க அங்கு வந்த தாமரை கண்ணம்மாவுக்கு அறிவுரை கூற முடிவெடுக்க தெரியல என அழுகிறார்.
அதன் பிறகு தாமரை நான் ஒரு வழி சொல்றேன் கண்ண மூடி ஒரு நிமிஷம் கோபமான பாரதிய நினைச்சுக்கோ, இன்னொரு பக்கம் குழந்தைகளோட அவரோட சந்தோஷமா வாழற மாதிரி நினைச்சுக்க கடைசில எது உன் கண்ணு முன்னாடி வந்து நிற்கிறதோ அதுதான் உன்னுடைய ஆசை அதையே முடிவாய் எடு என்று சொல்லி கண்ணை மூட சொல்ல கண்ணம்மாவிற்கு குழந்தைகளுடன் பாரதியோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
அதன் பிறகு கண்ணம்மா பாரதியை தேடி செல்ல அதற்குள் அகிலனின் கார் ரிப்பேர் ஆகி நிற்கிறது. பிறகு காரை சரி செய்து கொண்டு அனைவரும் கிளம்ப கண்ணம்மா ஓடி வருகிறார். இருந்தாலும் கார் கிளம்பி கொஞ்ச தூரம் போனதும் பாரதி காரை நிறுத்தி கண்ணம்மா கூப்பிடுவது போலவே இருப்பதாக சொல்லி காரை விட்டு இறங்கி தேடுகிறார்.
பிறகு பாரதியும் கண்ணம்மாவும் சந்தித்துக் கொள்ள கண்ணம்மா நமக்குள் நடந்த பிரச்சனைகள் கசப்பான சம்பவங்கள் எல்லாத்தையும் மறந்து விட்டதாக சொல்கிறார். நானும் தோற்கல நீங்களும் தோற்கல நம்முடைய காதலும் அன்பும் ஜெயித்து விட்டதாக சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
மேலும் கண்ணம்மா என்னை ஏத்துக்குவீங்களா என கேட்க பாரதி கட்டிப்பிடித்து ஆசையை வெளிப்படுத்துகிறார். பிறகு சௌந்தர்யா இருவரையும் வாழ்த்த பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்து சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update