தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாண்டி பாரதி அடித்து கீழே சரிய வைத்த நிலையில் திடீரென பாரதி எழுந்து பாண்டியை அடித்து கண்ணம்மா காலில் விழ வைக்கிறான். இந்த கோபத்தில் பாண்டி இரும்பு கம்பியை கொண்டு பாரதியின் தலையில் அடித்து கீழே விழ வைக்கிறான்.
பிறகு எல்லோரும் பாரதியை ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்கின்றனர். மறுபக்கம் சௌந்தர்யா கண்ணாடி பாட்டிலை கீழே போட்டு உடைத்து ஏதோ அபசகுணம் என நினைத்து பதறிப்பை பாரதியை பார்க்கப் போவதாக கிளம்ப அகிலன், அஞ்சலி கூட வருகின்றனர்.
கணேசன் ஹாஸ்பிடலில் டாக்டர் பாரதி அட்மிட் செய்துவிட்டு சௌந்தர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல மூவரும் பதறுகின்றனர். இந்தப் பக்கம் கண்ணம்மா இவருக்கு எதுக்கு தேவையில்லாத வேலை அந்த பாண்டி வாயால் கண்ணம்மா எந்த தப்பும் செய்யாதவன்னு சொல்ல வெச்சிட்டேன் அதோட பிரச்சனை முடிஞ்சிடுச்சு இவர் போய் எதற்கு குஸ்தி செய்யணும், அவன ஜெயிக்கணும். நான் பாட்டுக்கு என் பொழப்பு பார்த்துட்டு வாழ்க்கை வாழலாம்னு பார்த்தா இவர் எதுக்கு இங்க வந்து இப்படி தொந்தரவு பண்ணனும்? என கோபப்படுகிறார்.
இந்த நேரத்தில் ஒருவர் வந்து நான் ஹாஸ்பிடல் இருந்து தான் வரேன் டாக்டர் தம்பி ரொம்ப சீரியஸ்னு சொல்றாங்க எதுவாக இருந்தாலும் காலைல கண்விழித்தால் தான் தெரியும்னு சொல்லிட்டாங்க என சொல்ல லட்சுமி எனக்கு அப்பா வேணும் என கண்ணம்மாவை கட்டி அணைத்து அழுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.