தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கணேசன் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க அப்போது பாரதி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்து இன்னும் பத்து நிமிடத்தில் ஆபரேஷன் முடிந்து ஜார்ஜ் இதயத்தை கொண்டு வந்துவிடுவார். சாப்பர் வழியாக கொண்டு பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க ரோடு வழியாக கொண்டு போவார் இதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டீர்களா என கேட்க அதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் இன்னும் எதுவும் பேசல இனிமே தான் பேச வேண்டும் என கூறுகிறார்.
இதைப்பார்த்த கண்ணம்மா ஆபரேஷன் முடிந்து விட்டதா வந்து கேட்க பாரதி நாங்க என்ன பேசிட்டு இருக்கோம் நீ வந்து என்ன கேட்கிற என கேட்க நான் எது கேட்டாலும் ஒரு காரணம் இருக்கும்னு உங்களுக்கு தெரியாதா டாக்டர் சார் என சொல்ல இன்னும் பத்து நிமிடத்தில் ஆபரேஷன் முடிந்து விடும் என்றும் இதயத்தை எப்படி கொண்டு செல்வது ஏதாவது ஏற்பாடு பண்ணி இருக்கியா என கேட்க எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு நேத்து மாற்றுவழி கண்டிப்பாக ஒன்று வேண்டும் என முடிவு செய்து எல்லோரிடமும் பேசி எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது என கூறுகிறார்.
உடனே கணேசன் நீங்க பேசினதும் எல்லாம் நடந்திடுமா சும்மா அத விட்டுட்டு இருக்காதீங்க என சொல்ல அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு என எல்லாம் தயார் நிலையில் மருத்துவமனையில் வந்து நிற்கிறது. பிறகு பாரதி பத்திரிக்கையாளர்களை சந்தித்து இன்னும் பத்து நிமிடத்தில் ஆபரேஷன் முடிந்து விடும் ரோடு வழியாக இதயத்தை ஒன்றரை மணி நேரத்தில் சென்னை கொண்டு சென்று விடுவதற்காக போலீஸ் அதிகாரிகள் உதவ உள்ளனர் என கூறுகிறார்.
இதெல்லாம் சாத்தியமா முடியுமா என பத்திரிகையாளர்கள் நெகட்டிவாக கேள்விகளை எழுப்ப பாரதி கோபப்பட்டு கொஞ்சம் பார்த்துட்டு வாங்க பேசுங்கள் அப்போது தான் நல்லதே நடக்கும் என கூறுகிறார். பிறகு கனமானது ஆபரேஷன் முடிந்துவிட்டது என சொல்ல உள்ளே சென்ற பாரதி இதயத்தை வாங்கிக்கொண்டு ஆம்புலன்சுக்கு வருகிறார்.
கண்ணம்மாவும் ஆம்புலன்சில் ஏற முயற்சி செய்ய அப்போது கணேசன் எங்கே வரிங்க இது என்ன டவுன் பஸ்ஸா? நான் தான் சொன்னேன்ல பஸ்ஸை பிடித்து வரச் சொல்லி என திட்டி கண்ணம்மாவையும் கூட இருந்த நர்ஸையும் இங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிடுகிறார். இதை டிவியில் பார்த்த ஹேமா, லட்சுமி அம்மாவை அங்கேயே விட்டுட்டு வந்துட்டாங்க என கண்கலங்கி கதறி அழுகின்றனர்.
விக்ரம் கணேசன் எதுக்கு இப்படி பண்ணனும் அவங்க தான் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணாங்க அவங்கள அங்கேயே அப்படியே விட்டுவிட்டு வந்தால் என்ன அர்த்தம் என கோபப்படுகிறார். பிறகு பாரதி விக்ரமுக்கு போன் செய்து நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம் சக்தியை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லுங்கள் என சொல்ல பிறகு விக்ரம் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.
மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் ஆம்புலன்ஸ் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. பாரதியும் பரபரப்பான சிந்தனையில் பயணிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.