Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெண்பாவை வெருப்பேற்றிய கண்ணம்மா. இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2 . இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் வெண்பா இந்த கண்ணம்மா எப்படியோ அவ நெனச்சத பண்ணிட்டா பாரதி, சௌந்தர்யா ஆன்ட்டி என எல்லார் மனசுலையும் இடம் பிடிச்சுட்டா என விஜய்யிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் கண்ணம்மா வெண்பாவை வெறுப்பேற்றி கடுப்பாக்குகிறார்.

பிறகு தண்டபாணி பாரதியிடம் இதுக்கெல்லாம் காரணம் கண்ணம்மா தான் நீ ஒரு நன்றி கூட சொல்லல என சொல்ல பாரதி கண்ணம்மாவை கிளாஸ் ரூமில் வந்து சந்தித்து கட்டியணைத்து நன்றி சொல்கிறார். பாரதி கண்கலங்க கண்ணம்மாவும் கண் கலங்கி ஆறுதல் சொல்ல இதையெல்லாம் மது பார்த்து விடுகிறார்.

பிறகு மது கண்ணம்மாவை கிண்டல் அடிக்க கண்ணம்மா எங்களுக்குள் காதல் எல்லாம் கிடையாது பாரதி நல்ல நண்பன் தான் என சொல்கிறார்.

அடுத்ததாக ஷர்மிளா வீட்டில் கண்ணம்மா செய்த விஷயங்களை கேட்டு அதிர்ச்சியாக பேச விஜய் நாங்க ஏதாச்சு திட்டம் போட்டாலும் அது வேண்டாம்னு நீ ஒரு திட்டம் போட்டு தருவ, அது சரி வரலனாலும் அதுக்கு நாங்க தான் காரணம் என்று திட்டுவேன்னு சொல்லி உள்ளே போக வெண்பா அந்த கண்ணம்மாவை விடமாட்டேன் இந்த வெண்பா யாருன்னு காட்டுறேன் என சவால் விடுகிறார்.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update