தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா வீட்டுக்கு பாரதி வர உனக்கு இதெல்லாம் தேவையா என கேட்கிறார். நீ இருக்கிற நிலைமைக்கு பிறந்தநாள் தேவையா என கேட்கிறீர்களா என கண்ணம்மா கேட்கிறார். நான் அப்படி கேட்கல எதுக்கு வேண்டாத செலவுனு கேட்கிறேன் என பாரதி கூறுகிறார். என்னால உங்களுக்கு ரொம்ப அக்கறை தான் என கண்ணம்மா சொல்ல பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இரண்டு குழந்தைகளை விட்டு அவங்கள என்கிட்ட லட்சுமிக்கு அப்பா யார் என்று கேட்க வைத்து என்னை எதுக்கு இந்த பிரச்சினையில இழுத்துவிட்ட. யாரு பெத்த பிள்ளைக்கு அப்பான்னு என் தலையில கட்ட பாக்குறியா. எவனுக்கோ போய் குழந்தைய பெற்றுக் கொள்ளும் போது இருந்த தைரியம் உண்மையை சொல்றதுக்கு ஏன் இல்லை. உண்மையை சொல்றதுக்கு தைரியம் தேவை இல்ல ஏன்னா அது உண்மை.
ஒன்பது வருஷமா ஒரு சந்தேகத்தை மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு இன்னமும் அப்படியே மாறாமல் இருக்க இங்க பாருங்க என பாரதியை திட்டுகிறார் கண்ணம்மா. யார் என்ன ஆனா நீதான் என் கூட சேர்ந்து வாங்கிடலாம்னு கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கே என பதிலுக்கு கண்ணம்மாவை திட்டுகிறார் பாரதி. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தைரியமில்லை என கண்ணம்மா பாரதியை திட்டுகிறார். ஒருவேளை நான் இந்த பிறந்தநாள் விழாவிற்கு வரனும்னா இப்ப யாரும் இல்ல என்கிட்ட ஒத்துக்கோ நான் தப்பு தான் பண்ணிட்டேன்னு பாரதி சொன்ன நான் சாகுற வரைக்கும் செய்யாத தப்ப ஒப்புக்கொள்ள மாட்டேன் என கண்ணம்மா கூறுகிறார். பிறகு என்னதான் சொன்னாலும் நான் இந்த பிறந்தநாள் விழாவுக்கு வர மாட்டேன் என சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார் பாரதி.
இந்த பக்கம் கடைக்கு போய் துணிகளை எடுத்து வாங்கிட்டு பாரதி வீட்டிற்கு வருகிறார் லட்சுமி. இந்த நேரத்தில் பாரதியும் வீட்டுக்கு வர லட்சுமியை கூட்டிக் கொண்டு மேலே செல்கிறார். எங்க அப்பா யாரு அவர் எப்படி இருப்பார் எங்க இருக்காரு என கேள்வி கேட்க பாரதி அதான் அம்மா சொல்றேன்னு சொல்லி இருக்காங்க ஒரு நாள் வெயிட் பண்ணு எல்லாம் நல்லதே நடக்கும் என கூறுகிறார். சரி நீங்க சொல்ற மாதிரி தெரியல நான் எங்க அப்பாவுக்கு டிரஸ் எடுத்திருக்கேன் அவருடைய சைஸ் தெரியாது அதனால எல்லாத்தையும் ஒண்ணு எடுத்து இருக்கேன். இதுல எங்கப்பாவுக்கு எது சரியா இருக்குன்னு சொல்லுங்க என பாரதியிடம் காட்ட இருப்பதிலேயே மிகப் பெரிய சைஸ் டிரஸ்ஸை எடுத்துக் கொடுக்கிறார். எங்க அப்பா இவ்வளவு பெருசாவா இருப்பாரு என அதிர்ச்சி அடைகிறார் லட்சுமி. பரவால்ல என்னதான் இருந்தாலும் அவர் என்னுடைய அப்பா என கூறுகிறார்.
அதன் பிறகு சௌந்தர்யா பாரதியின் நிற்க வைத்து அந்த பொண்ணு எவ்வளவு ஏக்கத்தோட அப்பாவை பற்றி கேட்கிறார் நீ அவ்வளவு பெரிய இடத்தை எடுத்துக் கொடுக்கிறேன் உன் மனசுல கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா என கேட்க இது எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான் என சொல்கிறார் பாரதி. அந்த குழந்தை மனசுல ஆசைய வளர்த்து உங்க அப்பா யாரு நீ போய் பாரதி கிட்ட கேளு நீ அனுப்பி வைத்திருக்கிறாளே கண்ணம்மா அவளுக்குத்தான் இரக்கமில்லை. உங்க அப்பா இருக்கிற அட்ரஸ் கொடுத்து இங்க தான் உங்க அப்பா இருக்காரு போய் பார்த்துக்கோனு சொல்லவா என பாரதி சொல்ல சௌந்தர்யா ஏன் என சத்தம் போட்டு அடக்குகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.