விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ஷர்மிளா மேடையில் வைத்து உருவாகி அறிமுகப்படுத்த அவரும் மகிழ்ச்சியாக அனைவருக்கும் என்று கூறுகிறார். சௌந்தர்யா வேணுகோபால் அகிலன் என அனைவரிடமும் பேசி உற்சாகம் அடைகிறார். அதன் பிறகு என்னுடைய வருங்கால மனைவி வெண்பா ஒரு சில வார்த்தை பேசுவார் என மைக் கொடுக்கிறார்.
இந்த கல்யாணத்தில் கொஞ்சம்கூட விருப்பமில்லாத வெண்பா எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை. ரோஹித்தை எனக்கு சுத்தமாக பிடிக்கல என கூறுகிறார். என் மனசுல வேற ஒருத்தன் இருக்கான் அவனுக்காகத் தான் இத்தனை வருஷமாக கல்யாணம் பண்ணிக்காமல் காத்துகிட்டு இருக்கேன் என வெண்பா சொல்ல பாரதி உட்பட குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
வெண்பா இவ்வாறு சொல்வதை கேட்ட ரோஹித் உடனே யார் அந்த லக்கி மேன்? நீ பேசுறது எல்லாம் வைத்துப் பார்த்தால் அவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கார் போல, அவருடைய பெயரைச் சொல்லி அவரும் அவருடைய மனதில் இருப்பதை சொல்லட்டும். உங்க ரெண்டு பேருக்கும் ஓகேனா உடனே இந்த பங்ஷனை உங்களுடைய மேரேஜ் பங்ஷனா மாத்திடலாம் என கூறுகிறார். வெண்பா பெயரை சொல்லாமல் அமைதியாகவே இருக்க ஒரு கட்டத்தில் ரோஹித் அப்படி என்றால் நான் பெயரை சொல்கிறேன் என டாக்டர் பாரதிதான் அந்த நபர் என பெயர் கூறுகிறார்.
உடனே வெண்பா ஆமாம் பாரதிதான் காதலிக்கிறேன் அவனுக்காகத் தான் இத்தனை வருஷமாக காத்துகிட்டு இருக்கேன் அதுக்கு என்னடா இப்போ என சத்தம் போடுகிறார். ரோஹித் பாரதி மனதில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம் ஒருவேளை அவருக்கும் காதல் இருந்தால் அவருடைய குடும்பத்தாரும் இங்கே தான் இருக்கிறார்கள் அப்படியே நிச்சயதார்த்தம் செய்து விடலாம் என ரோகித் கூறுகிறார். பாரதியை எழுந்து இதுகுறித்து பதில் சொல்ல சொல்ல அங்கு இருப்பவர்கள் எல்லோரும் பாரதி சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று சத்தம் போடுகின்றனர். சொல்கிறேன் என பாரதி எழுந்து நிற்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.