தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி ஹாஸ்பிடல் இருக்க அப்போது அங்கு வரும் வெண்பா பாரதியிடம் பேச முயற்சி செய்ய அவன் கோபப்படுகிறான். பிறகு எனக்கு உன்னால இன்னமும் அக்கறை இருக்கு அதனாலதான் நீ டிப்ரஷன்ல இருக்குன்னு தெரிஞ்சு உன்னிடம் பேச வந்தேன் தானே சொல்ல என்ன டிப்ரஷன் என்ன பாரதி கேட்க வீட்டில் நடந்த விஷயங்களை கேள்வி பட்டேன் என வெண்பா கூறுகிறார்.
அந்தக் கண்ணம்மா இந்த சந்தர்ப்பத்தை அவளுக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டு உன்கிட்ட இருந்து ஹேமாவ பிரிச்சுட்டான் அவன் ஒரு மனுஷியா என பேசி பாரதியை உசுப்பேத்த முயற்சி செய்ய பாரதி போதும் நிறுத்து கண்ணம்மா நான் தொட்டு தாலி கட்டின பொண்டாட்டி. எங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கும் நாங்க சண்டை போடுவோம் ஒன்னா சேர்ந்து கொள்வோம் எங்களுடைய வாழ்க்கைக்குள்ள தலையிட உனக்கு எந்த அருகதையும் கிடையாது என திட்டி விட்டு பாரதி சென்று விடுகிறார்.
ரோஹித் என் கழுத்துல தாலி கட்டி இருந்தாலும் உன்னை அடைகிறது தான் என்னுடைய லட்சியம். அது முடியாமல் போன உங்க வீட்ல ஒருத்தரும் இருக்க மாட்டாங்க உன்னையும் சேர்த்து தான். இதுவரைக்கும் தோழியா பார்த்த வெண்பாவை இனி வில்லியா பார்ப்ப என வெண்பா மனதுக்குள் சொல்லி கொள்கிறார்.
அதன் பிறகு கண்ணம்மா வீட்டில் குலோப் ஜாமுன் செய்ய மூவரும் ஏற்பாடு செய்து கொண்டு ஜாலியாக சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த பக்கம் பாரதி வீட்டுக்கு வர அப்போது சௌந்தர்யா அவனை கூப்பிட்டு நாளைக்கு தீபாவளி கண்ணம்மா வீட்டுக்கு போய் தீபாவளி கொண்டாட போறோம் நீயும் வா என சொல்ல, நீங்க போய் சந்தோஷமா கொண்டாடிட்டு வாங்க என் பொண்ணு சந்தோஷமா இருந்தா போதும் அவ இங்க இருக்கணும் அங்க இருக்கணும்னு இல்ல எங்கிருந்தாலும் அவ சந்தோஷமா இருக்கணும் என கூறுகிறார்.
பின்னர் வெண்பா ஹாஸ்பிடல் தூங்கிக் கொண்டிருக்க மறுநாள் காலையில் எழுந்து பார்க்க யாரோ தன்னை கட்டி பிடித்து படித்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆகி பார்த்தால் அது ரோகித் என தெரிய வருகிறது. வெண்பா கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ரோஹித் பிறகு வெண்பாவிடம் ரொமான்டிக்காக பேசி வெறுப்பேத்துகிறார். இதனால் வெண்பா கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.