தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பா பாரதியை தான் காதலிப்பதாக சொன்ன ரோஹித் பாரதியிடம் நீங்களும் வெண்பாவை காதலிக்கிறீர்களா கல்யாணத்துக்கு சம்மதமா என கேட்க எல்லோரும் பதில் சொல்லுங்கள் என சத்தமிட பாரதி எனக்கு வெண்பாவை திருமணம் செய்வதில் துளிகூட விருப்பம் இல்லை. இதுவரைக்கும் நான் அவளை என் தோழியாக மட்டும்தான் பார்த்துள்ளேன். வெண்பா மட்டும் இல்லை என் வாழ்க்கையில் வேறு யாருக்கும் இடமில்லை என சொல்ல அனைவரும் கை தட்டுகின்றனர்.
இதையெல்லாம் கேட்ட வெண்பா அதிர்ச்சியில் நிற்க பிறகு ரோஹித் எல்லாவற்றையும் மறந்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்வதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் டைம் எடுத்து யோசிச்சு நல்ல முடிவா சொல்லு என கூறுகிறார். சர்மிளா அடுத்த வாரம் நான் யுஎஸ் செல்கிறேன். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தனித்தன்மை லிவிங் டுகெதர் முறையில் வாழ்வார்கள். நான் வந்த பிறகு இருவருக்கும் திருமணம் நடக்கும் என கூறுகிறார்.
பிறகு வெண்பா கீழே இறங்கிச் செல்லும்போது சௌந்தர்யா மற்றும் கண்ணம்மா என இருவரும் ரோஹித்தை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழும் படி அறிவுரை கூறுகின்றனர். இவர்கள் வீட்டுக்கு கிளம்பியது எல்லாம் கண்டிப்பாக மாறும் இந்த வெண்பா யாருன்னு அப்போ தெரியும் என சவால் விடுகிறார். பிறகு வீட்டுக்கு வந்த அகிலன் குடும்பத்தோடு அமர்ந்து அஞ்சலியிடம் நடந்த விஷயங்களை சொல்லி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.