தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லட்சுமி சாப்பிட்டுக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த கண்ணம்மா அவரிடம் சில கேள்விகளை கேட்க லட்சுமி பதிலேதும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறார். உன்கிட்டதான் கேட்டுட்டு இருக்கேன் என சொல்ல உன் கிட்ட நான் பேச மாட்டேன் கோபமாக இருக்கிறேன் என சொல்லி விட்டு உள்ளே சென்று விடுகிறார் லட்சுமி. இதனால் வருத்தத்தோடு கண்ணம்மா அமர்ந்து இருக்க அந்த நேரத்தில் வாய்தா வடிவுகரசி வந்து என்னாச்சு என கேட்க கண்ணம்மா நடந்த விஷயங்களைக் கூறுகிறார். லட்சுமி தன்னுடைய அப்பாவுக்காக எழுதி வைத்திருந்த லெட்டரை எடுத்து படிக்கிறார். இதைப் பார்த்துவிட்டு பத்து நாளைக்கு தேடுவா அப்புறம் அவளாகவே அமைதியாகி விடுவார் என கூறுகிறார் வாய்தா வடிவுக்கரசி. அப்பா பாசத்துக்காக என்கிறார் பாவம் என்ன செய்வது என கூறுகிறார்.
இந்த பக்கம் வீட்டில் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது சௌந்தர்யா ஹேமாவிடம் லட்சுமியின் அப்பா இனி வரவே மாட்டார் என கூறியதைப் பற்றி சொல்கிறார். ஏன் இப்படி சொன்னீங்க என எல்லோரும் கேட்க எல்லாம் ஒரு காரணமாத்தான் என கூறுகிறார். இந்த நேரத்தில் ஹேமா வந்து உங்க எல்லோரிடமும் ஒரு விஷயம் சொல்லணும் ஆனா யாரும் என் மேல கோவ படக்கூடாது என்று திட்டக்கூடாது என் மனசுல பட்டதை சொல்கிறேன் என கூறுகிறார்.
சொல்லு என எல்லோரும் கேட்க டாடி தனியா இருந்து கஷ்டப்படுறாரு அவருக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு நான் உங்க கிட்ட ஏற்கனவே சொன்னேன். சமையல் அம்மாவுடன் தனியாகத்தான் இருக்காங்க அவங்க எனக்கு ரொம்ப பிடிக்கும், அவங்க டாடியை நல்லா பாத்துப்பாங்க, லட்சுமியுடன் அப்பாவும் வரமாட்டார் பாட்டி சொன்னாங்க அதனால இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா என்ன என்று தோன்றுகிறது. இதை கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். சௌந்தர்யா நீ சொன்னது நல்ல விஷயம் தான் நாங்க யோசிச்சி பார்க்கிறோம் அப்புறம் முடிவு செய்யலாம் என கூறி ஹேமாவை மேலே அனுப்பி பேக் எடுத்துட்டு வர சொல்கிறார். அதற்குள் சௌந்தர்யா இதற்காகத்தான் அப்படி ஒரு விஷயத்தை சொன்னேன். பெரியவங்களால நடக்காதது குழந்தைகளால் நடந்தால் நல்லது தானே. இதுக்கு பாரதி எப்படி ஒத்துக் கொள்வான் என சௌந்தர்யாவின் கணவர் கேட்க ஆரம்பத்தில் கொடுக்க மாட்டான் ஆனால் ஹேமாவுக்காக பிறகு மனதை மாற்றிக் கொள்வான். கண்ணம்மாவை மன்னித்து ஏற்றுக் கொள்வான். இதற்கு அண்ணி என்ன சொல்வது என அகிலன் கேட்க கண்ணம்மாவை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறுகிறார்.
ஸ்கூலுக்கு வந்த ஹேமா லட்சுமியை அழைத்து உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ஆனா நீ கோபப்படக் கூடாது என கூறுகிறார். நீ என்னோட பெஸ்ட் பிரண்ட் உன் மேல நான் எதுக்கு கோபப்பட போகிறேன். எதுவாக இருந்தாலும் சொல்லு என கேட்க ஹேமா உங்க அப்பா வரவே மாட்டார்னு எங்க டாடி சொன்னாரு, அதனால உங்க அம்மாவுக்கும் எங்க அப்பாவுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சா அவங்க சந்தோஷமா இருப்பாங்க. நாமும் ஒரே வீட்டில் ஜாலியா இருக்கலாம் என கூற இதைக் கேட்ட லட்சுமி அப்படி ஒரே அடி போட்டா, எங்க அப்பா இருக்காரு, அவர் இருக்கும் போதே இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு சொல்ற, எங்க அப்பாவை தேடி கண்டு பிடிப்பேன் என கூறுகிறார்.
இன்னொரு முறை இந்த மாதிரி பேசுனா அடி தான் விழும். இதுக்குத்தான் எங்க அம்மா யார் கிட்டயும் பேசாமல் தனியா இருக்காங்க, அவங்க பண்றது சரி தான். இனிமே நீ எங்க அம்மா கிட்ட பேச கூடாது, ஐ ஹேட் யூ என கூறுகிறார். இதனால் ஹேமா இவ இப்படி சொல்லுறா, அப்போ சமையல் அம்மாவை எங்க அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாதா? என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.