தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சக்திக்கு ஆபரேஷன் உள்ளே நடந்து கொண்டிருக்க அவர் பூரண குணம் பெற்று திரும்பி வரவேண்டும் என பல்வேறு இடங்களில் பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது. கண்ணம்மா நல்லபடியாக ஆபரேஷன் நடந்து முடிந்து கடவுளையும் டாக்டர்களையும் நம்புங்க என சக்தியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து நர்ஸ் வெளியே வர அவரிடம் ஆபரேஷன் குறித்து கேட்க கொஞ்சம் கிரிட்டிக்கலாக தான் இருக்கிறது என சொல்ல அனைவரும் பதட்டம் அடை கின்றனர். ஆனால் அதையெல்லாம் தாண்டி பாரதி வெற்றிகரமாக இந்த ஆபரேஷனை முடிக்கிறார். பிறகு வெளியே வந்த அவர் சக்தியின் பெற்றோரிடம் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது இனிமே சக்தி எல்லோரைப் போலவும் சந்தோஷமாக இருக்கலாம் என கூறுகிறார்.
பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்த விஷயத்தை கூறுகிறார். டாக்டர்களில் அசோசியேஷன் தலைவர் பேசுகையில் பாரதியை ஓவராக புகழ்ந்து பேசுகிறார். பாரதி ஒரு ஆளாக இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் இது மிகப்பெரிய சாதனை என பாராட்டுகிறார். பிறகு இந்த ஆபரேஷனுக்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்ட விக்ரம் மருத்துவமனைக்கு பாராட்டு தெரிவிக்கிறார்.
இதைக்கேட்டு எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். சௌந்தர்யா, வெண்பா ஷர்மிளா என அனைவரும் சந்தோஷ படுகின்றனர். பிறகு பத்திரிக்கையாளர்கள் டாக்டர் அசோசியேஷன் தலைவர் சொன்னதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க இது என்னுடைய தனிப்பட்ட முயற்சி அல்ல இது ஒரு கூட்டு முயற்சி இதில் பங்குகொண்ட எல்லோருக்கும் இந்த வெற்றியில் பங்கு உள்ளது என கூறுகிறார்.
குறிப்பாக இவை அத்தனையும் சிறப்பாக நடந்து முடியவும் எனக்கு பிரஷர் இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கும் மிக முக்கிய காரணம் விக்ரம் மருத்துவமனையில் அட்மின் ஆபீசர் கண்ணமா தான் என கூறுகிறார். பிறகு பத்திரிகையாளர்கள் எல்லோரும் கண்ணம்மா யார் என கேட்க கண்ணம்மாவை கை காட்டுகிறார் பாரதி. பாரதி கண்ணம்மாவை புகழ்ந்து பேசியதை பார்த்து வெண்பா அதிர்ச்சி அடைகிறார். ஷர்மிலா கண்ணம்மாவை பாராட்டுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.