தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் காலையில் ஹேமா, லட்சுமி என இருவரும் எழுந்து புது துணிவுடன் ரெடி ஆகி காத்துக் கொண்டிருக்க கண்ணம்மாவும் குளித்து ரெடியாகி வர மூவரும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள பிறகு ஹேமா நான் ஒரு ஸ்வீட் செய்யறேன் எனக்கு சொல்லித்தாங்க என சொல்ல பிறகு கண்ணம்மா கேசரி செய்ய சொல்லிக் கொடுக்க ஹேமா செய்கிறாள்.
பிறகு சௌந்தர்யா, அகிலன், அஞ்சலி, வேணு என எல்லோரும் வந்துவிட எல்லோரும் ஒன்றாக கூட்டு சேர்ந்து தீபாவளி கொண்டாடுகின்றனர். பட்டாசு வெடித்து சந்தோஷமாக இருக்க அந்த பக்கம் பாரதி ரூமில் தனியாக சோகமாக உட்கார்ந்து ஹேமாவை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக சௌந்தர்யா சோகமாக இருக்க கண்ணம்மா என்னாச்சு அத்தை என கேட்க நாம எல்லோரும் இங்கே சந்தோஷமா தீபாவளி கொண்டாடிட்டு இருக்கோம். ஆனா அங்க பாரதி தனியா சோகமா இருக்கான் என்ன பண்ணிட்டு இருக்கான்னு தெரியல ஹேமா போன் பண்ணி ஹாப்பி தீபாவளி டாடி என ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவன் சந்தோஷப்படுவான் என சொல்ல கண்ணம்மா உங்களுடைய வருத்தம் எனக்கு புரியுது ஹேமாவ நான் நேரிலேயே அனுப்பி வைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார்.
அடுத்ததாக கண்ணம்மா ஹேமாவை அழைத்து பாரதி பற்றி பேச ஹேமா எனக்கும் காலையிலிருந்து டாடி பத்தி ஞாபகம் இருந்தது. நான் ஒன்னு சொல்லவா என ஹேமா சொல்ல கண்ணம்மா சொல்லு என கூற நான் நேர்ல போய் அவரை பாத்துட்டு வந்துரவா என கேட்க கண்ணம்மா சரி என சந்தோஷமாக சொல்ல ஹேமா நான் செஞ்ச கேசரிய குடுங்க நான் எடுத்துட்டு போய் கொடுக்கிறேன் டாடிக்கு ரொம்ப பிடிக்கும் என கூறுகிறார்.
பிறகு ஹேமா பாரதியிடம் சென்று கேசரி கொடுத்து தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல பாரதி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
