Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணம்மாவால் கடுப்பான பாரதி.. ஹேமாவால் பதறிப்போன குடும்பத்தினர்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் பாரதி ஹாஸ்பிடலில் இருக்க நர்ஸ் ஒருவர் பாதுஷாவை எடுத்து வந்து கொடுத்து எடுத்துக்கோங்க டாக்டர் என சொல்ல பாரதியும் தனக்கு பிடித்த பாதுஷா என்பதால் ஒன்றுக்கு இரண்டாக எடுத்து சாப்பிட பின்னர் கண்ணம்மா தான் கொடுக்க சொன்னதாக நர்சு சொல்ல அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பின்னர் ரூமுக்கு வந்த கண்ணம்மா பாரதி வெறுப்பு ஏத்தி விட்டு செல்கிறார். இந்த கடுப்பில் பாரதி தன்னுடைய போனை மறந்து வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். இதனையடுத்து நர்சு போனை எடுத்து வந்த கண்ணம்மாவிடம் கொடுக்க அவர் நான் அவரது வீட்டில் கொடுத்து விடுகிறேன் என கூறுகிறார்.

இந்த பக்கம் ஷர்மிளா அமெரிக்காவுக்கு கிளம்பிவிட ரோஹித் வீட்டிற்கு வந்து வெண்பாவை வெறுப்பேத்தி அவரது வாயால் ஐ லவ் யூ என சொல்ல வைக்கிறார். கூடிய விரைவில் மனசார இதை சொல்ல வைக்கிறேன் என கூறுகிறார். பிறகு சாந்தி ரோஹித் சாதாரண நபர் கிடையாது, மிகப்பெரிய பணக்காரர் என அம்மா ஊருக்கு கிளம்பும் போது சொன்னாங்க என கூறுகிறார்.

இந்த பக்கம் பாரதி வீட்டுக்கு போனதும் ஹேமா அவருக்காக காத்திருந்து அம்மா யாரு? எங்க இருக்காங்க? நீங்க யாரை விவாகரத்து பண்ண போறீங்க? சொல்லுங்க இது எல்லோரிடமும் கேட்க அனைவரும் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நிற்க அந்த நேரத்தில் கண்ணம்மா வீட்டிற்குள் நுழைகிறார். நான் யாரையும் விவாகரத்து செய்யப் போவதில்லை உங்க அம்மா எப்பவோ செத்துப் போயிட்டாங்க என பாரதி சொல்வதை கேட்டு கண்ணம்மா ஷாக் ஆகிறார். பிறகு ஹேமா தன் அம்மாவைப் பார்த்ததும் சமையல் அம்மா என சொல்லி மயங்கி விழுந்து விடுகிறார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பதறி போக்க இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌ ‌

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update