தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதிகண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ஸ்கூலில் லட்சுமி ஒருபக்கம் ஹேமா ஒருபக்கம் என அமர்ந்து கொண்டிருக்க அப்போது அங்கு வந்த பாரதி ஓய் ரவுடி என்ன தனியா உட்கார்ந்து இருக்கே என கேட்க லட்சுமி கடுப்பாக பதில் சொல்கிறார். எதுக்கு இவ்வளவு கோபம் என கேட்க அதெல்லம் ஒன்னும் இல்லை என கூறுகிறார்.
இந்த பக்கம் கண்ணம்மா ஹேமாவிடம் வந்து எதுக்கு டல்லா இருக்க என கேட்க எனக்கு லட்சுமி மாதிரி சண்டை போட தெரியாது என கூறுகிறார். அங்க வந்துட்டு இருக்கா என கேட்க எனக்கு தெரியாது அவ எங்க உக்காந்திட்டு இருந்தா எனக்கென்ன என கூறுகிறார். இருவரும் ஒரே மாதிரியான பதில் சொல்வதைக் கேட்ட பாரதி இரண்டு பேருக்கும் ஏதோ பிரச்சனை என புரிந்து கொள்கிறார்.
அதன்பிறகு லட்சுமி நீ ஏன் அங்க இருக்க இங்க வா, நான் இங்கதான் இருப்பேன் எனக்கு பிட கண்ணம்மா லட்சுமி அருகே சென்று என்ன பிரச்சினை என கேட்க பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசி திசை திருப்புகிறார். அதைப்போல் ஹேமாவிடம் பாரதி என்ன என கேட்க அவரும் வேறு எதையோ பேசி திசை திருப்புகிறார்.
சாப்பிட்டு முடித்துவிட்டு இருவரும் கிளாசுக்கு போன பிறகு லட்சுமி எதுக்கு என்கிட்ட வந்து அவங்க அப்பா பற்றி கேட்கிறாள். எல்லாம் உன் வேலையா எனக் கேட்க நான் என்ன பண்ண நான் எவ்வளவு சொல்லியும் அவ கேட்க மாட்றா எனக் கூறுகிறார். நல்லவ மாதிரி நடிக்காதே என்று சொல்லிவிட்டு பாரதி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
அதன்பின்னர் இந்தப்பக்கம் அஞ்சலியின் அப்பா வீட்டுக்கு வந்து இருக்க அவரிடம் அகிலன் கண்ணம்மாவை பாரதிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என சொன்னதை பற்றி கூற அவரும் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் இதில் நிறைய சிக்கல் இருக்கு என அகிலன் சொல்ல பிறகு அவர் வருத்தப்படுகிறார்.
அதன் பிறகு மாலை நேரத்தில் எல்லோரும் அமர்ந்து கொண்டே இருக்க அப்போது பாரதி ஹேமாவிடம் எதுக்கு இருக்க பாட்டி ஏதாவது சொன்னாங்களா என கேட்க என்னை எதுக்குடா இதுல இழுக்கிற என சௌந்தர்யா கேட்கிறார். நான் எதுவும் சொல்லல சமையல் அம்மாவும் எதுவும் சொல்லி இருக்க வாய்ப்பில்லை லட்சுமியும் எதுவும் சொல்லி இருக்கமாட்டார். அதாவது அப்போ நீங்க தாண்டி ஏதாவது சொல்லி இருக்கணும் என சொல்ல ஹேமா திடீரென அழுகிறார். எல்லோரும் என்னாச்சி ஏன் அழுவுற எனக்கேட்க மார்க் ஷீட் கொடுத்தாங்க, நான் எல்லாத்தையும் பெயில் ஆகிட்டேன் என கூறுகிறார். அதன்பிறகு பாரதி இவ்வளவுதானா விஷயம் அடுத்த முறை பாத்துக்கலாம் விடு என சொல்லிவிட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பிவிடுகிறார். அகிலன் ஹேமாவை விளையாட கூப்பிட்டு சென்றுவிடுகிறார்.
ஆனால் அம்மா சொன்னது உண்மை இல்லை என சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் புரிந்து கொள்கின்றனர். என்ன நடந்திருக்கும் என யோசிக்கின்றனர்.
இந்தப்பக்கம் கண்ணம்மா லட்சுமி பகலிலேயே படுத்துக் கொண்டிருந்ததை பார்த்து என்ன எது எனக் கேட்க அவர் ஒன்றும் இல்லை என கூறுகிறார். ஹேமா பற்றி பேச லட்சுமி கடுப்பாகிறார். நீ எதுக்கு அந்த எனக்கு சாப்பாடு எடுத்து வந்து ஊட்டி விடுற, என்னை போலவே அவளையும் பார்க்குற? இனிமே எனக்கு மட்டும் சாப்பாடு கொண்டு வா. நமக்கு யாருமே வேணா நாம தனியாகவே இருக்கலாம் என கூறுகிறார். அப்போலாம் நீ தான் நான் சொல்லுவேன் நாம ரெண்டு பேர் தானே என இப்போ நான் அதையே தான் சொல்கிறேன். அந்த அம்மாவோட பேரை சொல்லவே சொல்லாதே எனக்கு அப்படியே பத்திக்கிட்டு எரியுது இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்வேன் என கூறுகிறார்.
இதனால் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என தெரியாமல் குழம்புகிறார் கண்ணம்மா. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
