தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் பாரதி ஹாஸ்பிடலில் இருக்கும்போது வெண்பா அவரை தேடி வருகிறார். வெண்பாவை பார்த்ததில் அவர் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். அதன் பிறகு உள்ளே வந்த வெண்பா என நீ மொத்தமா மறந்துட்டல ஒரு போன் மெசேஜ் எதுவுமே பண்ணல. உனக்கு அவார்ட் கொடுத்திருக்காங்க அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட என்கிட்ட சொல்லல. இந்த கண்ணம்மாவை எல்லாம் கூப்பிட்டு இருக்க, ஆனா என்ன கூப்பிடல என கண் கலங்கி அழுதார். நீ என்னை திட்டி அனுப்பியதிலிருந்து நான் இன்னும் சாப்பிடல வீட்டை விட்டு வெளியே கூட வரல என சொல்கிறார். அப்படி எல்லாம் இல்ல எனக்கு உன் மேல கோபம் இருந்தது உண்மைதான் ஆனால் அது சரியாக கொஞ்சம் டைம் வேணும் இல்ல என கூறுகிறார்.
இந்த நேரத்தில் நான் ஸ்டேஷன் வந்திருப்பேனே அதை உள்ளே இழுத்து வந்து கொடுக்க என்ன ஏது என கேட்க என்னுடைய அப்பா அம்மாவோட பிரண்டு ஒருத்தர் ஹாஸ்பிடல் திறக்குறாரு. அந்த ஹாஸ்பிடல்ல நான் சீப் டாக்டரா ஜாயின் பண்ணி இருக்கேன் என கூறுகிறார். பிறகு உனக்குத்தான் முதல் இன்விடேஷன் என வெண்பாவிடம் கொடுக்கிறார்.
அதன்பிறகு இந்த எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என பாரதியை கட்டிப் பிடித்துக் கொள்கிறார். பின்னர் பாரதி வீட்டில் யோசனையில் இருக்க அவருடைய அப்பா என்ன எது எனக் கேட்க உங்களுக்கும் விக்ரம் மகளுக்கும் இடையே உள்ள பிரெண்ட்ஷிப் பத்திதான் யோசிச்சுட்டு இருந்தேன். அவர் அம்மாவை லவ் பண்ணினார் என்று தெரிந்தும் எப்படி நீங்க ஹாய் சார் இருக்கீங்க என சொன்ன பாரதிக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார் வேணு.
அதன்பிறகு கண்ணம்மா அந்த நம்பிக்கையை எனக்கு தரல என பாரதி சொல்ல அது தரக்கூடியது இல்லை நீதான் நம்பிக்கை வைக்க வேண்டும் என அறிவுரை சொல்கிறார். பிறகு மறுநாள் பாரதி தனது அப்பா அம்மாவுடன் விக்ரம் திறக்கும் புதிய ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். இவர்களை வரவேற்க விக்ரம் பாரதியுடன் சேர்ந்து சௌந்தர்யா மற்றும் வேணுவை மேடையில் உட்கார வேண்டும் என சொல்ல சௌந்தர்யா நாங்க எதுக்கு என கூறுகிறார். பிறகு வேணும் என்ன சொன்னாலும் அவன் கேட்க மாட்டான் நாம போய் உட்காரலாம் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.