தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ஆபரேஷன் முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பாரதி கண்ணம்மாவின் பக்காவான திட்டம் தான் காரணம் என பாராட்டினார். பிறகு கண்ணம்மா பேசும் போது நான் என்னுடைய வேலைகளை மட்டும் தான் செய்தேன் இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தி முடிக்க முக்கிய காரணம் டாக்டர் பாரதிதான். எல்லாத்துக்கும் காரணம் நான்தான் என பாரதி டாக்டர் என்பது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது என பேசினார்.
பிறகு விக்ரம் பாரதி மற்றும் கண்ணம்மா என இருவருக்கும் நன்றி கூறி பேசினார். அதுமட்டுமல்லாமல் கண்ணம்மா மருத்துவத் துறைக்கு மிகவும் பழக்கப்பட்டவர் என நினைக்க வேண்டாம் ரொம்ப புதிது ஆனால் திறமையானவர் என்பதை அவர் நிரூபித்துவிட்டார் என பாராட்டினார். பாரதியும் கண்ணம்மாவும் மாறி மாறி புகழ்ந்து பேச இதைப்பார்த்த வெண்பா கடுப்பாகிறார். மேலும் ஷர்மிளா இவங்க ரெண்டு பேரையும் யாராலும் பிரிக்க முடியாது கண்ணம்மா மேல பாரதிக்கு இருக்கிறது சாதாரண கோபம். சும்மா சீண்டி விட்டால் அது காணாமல் போய்விடும் என கூறுகிறார்.
அதன்பிறகு கண்ணம்மா ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்த சந்தோசத்தில் இருந்தேன் திடீரென மயங்கி விழ பாரதி விக்ரம் உள்ளிட்டோர் பதறி ஓடி வருகின்றனர். தண்ணீர் தெளித்து கண்ணம்மாவை ஏன் இப்ப சாப்பிட மறந்து விட்டேன் அதனால் மயங்கி விட்டேன் என கூறுகிறார். பிறகு பாரதிகண்ணம்மா மீது அக்கறை எடுத்து அவரை திட்டி ஜூஸ் கொடுத்து தேற்றுகிறார். இனிமே இப்படி சாப்பிடாமல் இருக்காத உன்னையும் உன்னை நம்பி இருக்கிறவர்களை நினச்சு பாரு என கூறுகிறார்.
இந்தப் பக்கம் சௌந்தர்யா அகிலன் அஞ்சலி உள்ளிட்ட ஒன்றாக அமர்ந்து பாரதி கண்ணம்மா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். பாரதி கண்ணம்மாவை பாராட்டிப் பேசியது நினைத்து ஆச்சரியப்படுகின்றனர். அகிலன் கண்ணம்மாவை விழுப்புரத்தில் விட்டு வந்தபோது எனக்கு கோபமாக வந்தது. பிறகு கண்ணம்மாவை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு கிளம்பிய பிறகுதான் எனக்கு அவன் மீது கோபம் போனது என கூறுகிறார்.
சௌந்தர்யா எல்லாத்துக்கும் கடவுள் அருள் தான் காரணம் என பேச அகிலன் கண்ணம்மா என பேசுகிறார். பிறகு சௌந்தர்யா இப்படி கடவுளா மனிதனா என பேச ஆரம்பித்தால் டாபிக் வேற எங்கேயோ சென்று விடும். இப்போதைக்கு இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்த சாதனையை நினைத்து சந்தோஷப் படுவோம் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.