தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமா மயங்கி விழ அவருக்கு ட்ரிப்ஸ் போட்டு சிகிச்சை அளிக்கிறார் பாரதி. குடும்பத்தார் எல்லோரும் ஹேமாவுக்கு என்னாச்சு என பதற பாரதி எதுவும் பிரச்சனை இல்லை என கூறுகிறார். பிறகு ஹேமா கண்விழித்தது நீ கடைசியா எப்போ சாப்பிட்ட என கேட்க சாப்பிடல என கூறுகிறார். வீட்டில் இருந்தவர்களும் வெளியே சென்று வந்ததால் சாப்பிட்டாயா இல்லையா என கவனிக்க மறந்து விட்டதாக கூற பாரதி எல்லோரையும் வெளியே அனுப்புகிறார்.
பிறகு ஹேமாவிடம் பேச இப்பயாவது சொல்லுங்க எங்க அம்மா எங்க இருக்காங்க? யாருக்கு விவாகரத்து கொடுக்க போறீங்க என அம்மா கேட்ட எங்க அம்மா செத்து போய்ட்டாங்க நான் யாருக்கும் விவாகரத்து கொடுக்கல என கூறுகிறார். அப்படின்னா சத்தியம் பண்ணுங்க என ஹேமா சத்தியத்தை பாரதியும் சத்தியம் செய்ய முடிவெடுக்க அதற்குள் ஹேமா தூங்கிவிடுகிறார்.
பிறகு கீழே இறங்கி வந்த பாரதி கண்ணம்மா தான் ஹேமாவிடம் விவாகரத்து விஷயம் பற்றி சொல்லி அவளுடைய அம்மா உயிரோட தான் இருக்கிறார்கள் என நம்பவைத்து இப்படி கேம் விளையாடுகிறார் என அவரிடம் சண்டையிடுகிறார். பாரதி பேசும் பார்த்து எல்லாம் கேட்டு கண்ணம்மா கண் கலங்குகிறார். இப்படியாக இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.