தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் விக்ரம் மருத்துவமனை துவக்க விழாவில் தன்னை பற்றியும் தன்னுடைய நோக்கம் குறித்தும் பேசுகிறார். மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் என்னென்ன சேவைகள் உள்ளன யாருக்கு எல்லாம் இலவசம் என்பது குறித்து பேசுகிறார். பிறகு தம்முடைய நண்பர்களான சௌந்தர்யா மற்றும் வேணுவை அழைத்து ஹாஸ்பிடலை திறந்து வைக்கச் சொல்கிறார்.
பிறகு விக்ரம் ரிமோட்டை கேட்க அங்கிருந்தவர்கள் எங்களுக்கு தெரியாது, எங்க கிட்ட இல்லை என கூறுகின்றனர். அதன்பிறகு கண்ணம்மா கையில் ரிமோட்டுடன் சார் இங்க இருக்கு என எடுத்து வந்து கொடுக்கிறார். கண்ணம்மாவை பார்த்ததும் பாரதி அதிர்ச்சி அடைகிறார். நான் வேலை பாக்கிற ஹாஸ்பிடல்ல இவ அட்மினா என கடுப்பாகிறார்.
ஹாஸ்பிடல் ஐ திறந்து வைத்த பிறகு சௌந்தர்யா வேணு ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த பாரதி எல்லாம் திட்டம் போட்டுத்தான் பண்ணியிருக்கீங்க என சத்தம் போடுகிறார். கண்ணம்மாவை இந்த ஆஸ்பிட்டல்ல வேலைக்கு சேர்த்துவிட்டு இருக்கீங்க என சொல்ல அவருடைய அப்பா அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறுகிறார். ஆனாலும் பாரதி அதை நம்பவில்லை.
சமையல் காரிக்கு ஹாஸ்பிடல் அட்மின் வேலையா? இனிமே ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது, அவளோடு சேர்ந்து வேலை பார்க்க முடியாது. நான் இப்பவே விக்ரம் அங்கிள் கிட்ட சொல்லிட்டு கிளம்புகிறேன் என பாரதி சொல்ல இப்படி விக்ரம் முதுகில் குத்தாதே என கூறுகின்றனர். நீங்க எல்லாரும் சேர்ந்து மாறி மாறி என் முதுகில் குத்து நீங்க அதுக்கு நான் எதுவும் சொல்ல கூடாதா என பாரதி சத்தம் போடுகிறார்.
இந்த நேரத்தில் விக்ரம் ஹெல்த் மினிஸ்டர் உடன் உள்ளே வருகிறார். உள்ளே வந்த அவருக்கு பாரதி சௌந்தர்யா, வேணு ஆகியோரை அறிமுகம் செய்து வைக்கிறார். நீங்க வாங்குன மனித நேய மருத்துவர் விருதை பரிந்துரை செய்தது நான்தான் என மினிஸ்டர் கூறுகிறார். இனிமே நான் என்னுடைய எல்லா செக்கப் எல்லாமே இந்த ஆஸ்பிட்டல்ல தான் பார்க்கப் போகிறேன். பாரதி தான் என்னை கவனித்துக்கொள்ள வேண்டும் என சொன்ன பாரதி தயங்குகிறார். பாரதி என்ன சொல்லப் போகிறாரோ சௌந்தர்யா பதற கண்டிப்பா வாங்க நான் இங்கதான் இருப்பேன் என கூறுகிறார். பிறகு மினிஸ்டர் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
பிறகு சௌந்தர்யா கடவுள் தான் இந்த மினிஸ்டரை அனுப்பி வைத்திருக்கிறார். ஒரு நிமிஷம்கூட இருக்க மாட்டேன்னு சொன்ன உடனே ஒரு வழியா லாக் பண்ணிட்டாரு எனக்கு சந்தோஷமா இருக்கு என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.