தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா லட்சுமி துணியின் நடுவில் பாரதியின் பெயர் பலகையை மறைத்து வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த பெயர் பலகையில் லட்சுமி ஐ லவ் யூ அப்பா என எழுதி இருப்பதை பார்த்து இன்னும் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு டைரியில் பாரதிதான் தன்னுடைய பயண தெரிந்த விஷயங்களை பற்றி லட்சுமி எழுதி இருந்ததை பார்த்து மிரண்டு போன கண்ணம்மா உடனடியாக சௌந்தர்யாவுக்கு போன் செய்து நடந்த விஷயங்களை ஆதாரத்தோடு சொல்லி இனி லட்சுமி முகத்தில் எப்படி முழிப்பேன் ஏன் என்கிட்ட இருந்து உண்மையை மறைச்சு எங்கன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன் என கதறி அழுகிறார்.
என்னைக்கா இருந்தாலும் லட்சுமிக்கு உண்மை தெரிந்தது தானே ஆக வேண்டும். அது இப்போது தெரிந்து விட்டது இனி அவள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் நான் அவளை கூட்டிக்கொண்டு அங்கே வரேன் எல்லாத்தையும் அங்க பேசிக்கலாம் என கூறுகிறார். பிறகு சௌந்தர்யா லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கு என்பதை நான் ஆதாரத்தோடு நிரூபிக்கிறேன் வாங்க என சொல்லி கூட்டிச் சென்று வீட்டில் சிசிடிவி புட்டேஜ் பார்க்கிறார்.
கண்ணம்மா வீட்டுக்கு வந்து பாரதியிடம் லட்சுமியிடம் உண்மையை சொல்லப் போவதாக பேசிற அன்றுதான் லட்சுமி இதையெல்லாம் கேட்டு இருக்க முடியும் என முடிவு செய்து அன்றைய புடேஜ் எடுத்து பார்க்க அதில் லட்சுமி வந்து நின்று அதிர்ச்சியோடு விஷயத்தைக் கேட்டு பாதியில் திரும்பிச் சென்றதை கவனிக்கின்றனர். எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுகிட்டு எப்படி அந்த குழந்தை இதையெல்லாம் தாங்கிக் கொண்டு இருக்கா என கண்கலங்கி அழுகிறார் சௌந்தர்யா. பெரியவங்கனு நாம ரெண்டு பேர் இருந்தும் நம்மால் எதுவும் பண்ண முடியல என கண் கலங்குகிறார் வேணு.
பிறகு அகிலன் இங்கு வந்து ஏன் தனியா உக்காந்து ரெண்டு பேரும் கண் கலங்கிட்டு இருக்கீங்க அப்படி என்ன ஆச்சு என்ன விஷயம் எனக் கேட்க சௌந்தர்யா கண்ணம்மா போன் செய்து லட்சுமிக்கு எல்லா விஷயமும் தெரிந்தது பற்றி சொன்னதை கூறுகிறார். இதுக்குத்தான் அன்னைக்கு லட்சுமியிடம் உண்மையை சொல்லிவிடலாம் என்று சொன்னேன். இன்னைக்கு எங்க கொண்டு வந்து இருக்கா பாத்தீங்களா என கூறுகிறார்.
பிறகு லட்சுமி ஹேமாவிடம் சரி நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் தாத்தா பாட்டியிடம் சொன்னா அவங்க அனுப்ப மாட்டாங்க என பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் இருவரும் வருகின்றனர். வேணு செல்லம் தாத்தாவுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறாயா லட்சுமியிடம் கேட்க சற்று யோசித்த லட்சுமி நம்ம தாத்தா தானே என முத்தம் கொடுக்கிறார். பிறகு சௌந்தர்யா தாத்தாவுக்கு மட்டும்தானா எனக்கு இல்லையா என முத்தத்தை கேட்டு வாங்குகிறார். லட்சுமிக்கு அவர் முத்தம் கொடுத்து பிறகு ஹேமாவிடம் ஒரு முத்தம் வாங்கிக் கொண்டு அவருக்கும் முத்தம் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.