தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹேமா யாரையும் விவாகரத்து செய்ய மாட்டேன் என சத்தியம் பண்ணுங்க என கேட்க பாரதி சத்தியம் செய்கிறார். பிறகு இதுவே நான் விவாகரத்து விஷயம் பற்றி பேசவே மாட்டேன் ஆனால் உன்னுடைய அம்மா அதை பிறக்கும்போதே இறந்து போயிட்டாங்க அதை ஞாபகத்துல வச்சிக்கோ என கூற அனைவரும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
அதன் பிறகு பாரதி உட்கார்ந்து சிந்தனையில் இருக்க உள்ளே போன லட்சுமி உங்களுக்கு என்னை பிடிக்குமா பிடிக்காதா டாக்டர் அப்பா என கேட்க லட்சுமி கேட்ட எல்லா கேள்விக்கும் பிடிக்கும் என பதில் சொல்கிறார் பாரதி. லவ் யூ சோ மச் என சொல்லி அவரை முத்தமிட்டு வருகிறார் லட்சுமி. பின்னர் உள்ளே போன கண்ணம்மா விவாகரத்து பண்ண மாட்டேன் என சொன்னதுக்கு தேங்க்ஸ் என்று சொல்லி விட்டு வருகிறார்.
இந்த பக்கம் எல்லோரும் எனக்கு எதிரா செயல்படுங்கள் என வெண்பா சாந்தியிடம் கோபப்பட்டு பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வக்கீல் போன் செய்து பாரதி விவாகரத்து கேசை வாபஸ் வாங்க சொல்லி விட்டதாக சொல்கிறார். அவருடைய பொண்ணு அழுததால் கேஸ் வேண்டாம் என சொல்லிட்டார் என சொல்ல கேசை வாபஸ் வாங்காதீங்க பாரதி மனசு கண்டிப்பா மாறும் என வெண்பா கூறுகிறார்.
இந்த கடுப்பில் வெண்பா பாரதிக்கு போன் போட பாரதி தூங்கிக்கொண்டிருக்க ஹேமா போனை எடுக்கிறார். ஹேமா ஹலோ என்ன சொன்ன வெண்பா டீ பாரதி உன் மனசுல என்ன தாண்டா நினைச்சுட்டு இருக்க என கேட்க நான் ஹேமா பேசறேன். எங்க அப்பா குரல் குழந்தை மாதிரியா இருக்கும் அது கூட உங்களுக்கு வித்தியாசம் தெரியலையா என நக்கல் அடிக்கிறார். பாரதி எங்கே என்ன பண்றான் என கேட்க அவர் தூங்கிட்டு இருக்காரு என கூறுகிறார்.
உங்களுக்கு கல்யாணம் என கேள்வி பட்டேன் கங்கிராஜுலேசன் என கூறுகிறார். பிறகு எங்கப்பா யாரையோ விவாகரத்து பண்றதா இருந்தா நான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணதால அவர் விவாகரத்து பண்ண மாட்டேன் நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணிட்டாரு என சந்தோஷமாக கூறுகிறார். இந்த விஷயத்தைக் கேட்ட வெண்பா கடுப்பாகிறார். போன வச்சுட்டு என சொல்ல ஏன் உங்க பக்கம் போன கட் பண்ற ஆப்சன் இல்லையா என ஹேமா நக்கலடிக்க போனை வைத்து விடுகிறார்.
வீட்டுக்கு வந்த லட்சுமி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து தன்னுடைய அம்மாவை ஸ்வீட் செய்து தருமாறு கேட்கிறார். கண்ணம்மாவும் சந்தோஷத்தில் ஸ்வீட் செய்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.
