Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

போலீஸ் ஸ்டேஷனில் வெண்பாவிற்கு அம்மா கொடுத்த ஷாக்.. கண்ணம்மாவிற்கு எதிராக பாரதி செய்யும் வேலை.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 23.04.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் சௌந்தர்யா அவளுடைய கணவர் அகிலன் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஹாஸ்பிடலில் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். கண்ணம்மா அட்மினாக வேலை செய்வதாக கூற அகிலன் ஆச்சரியமடைந்தார். அதுமட்டுமில்லாமல் வெண்பா தன்னுடைய அம்மாவுடன் அந்த இடத்திற்கு வந்த விஷயத்தை பிறகு கைது செய்யப்பட்ட விஷயத்தையும் சொல்கிறார்.

இந்த நேரத்தில் ஹேமா வந்து இனி ஸ்கூலுக்கு போக மாட்டேன் என கூறுகிறார். ஏன் எனக் கேட்க இன்னைக்கு சமையல் அம்மா சாப்பாடு கொண்டுவர ஆட்டோவில் அனுப்பி இருந்தாங்க. வேலைக்கு போறதுனால இனிமே வர மாட்டாங்கனு லட்சுமி சொன்னா.. சமையல் அம்மா திரும்ப வர வரைக்கும் நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன் என கூற அவரை ஒருவழியாக சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார் சௌந்தர்யா.

இந்தப் பக்கம் வெண்பா ஸ்டேஷன் உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது அவருடைய அம்மா ஷர்மிளா வருகிறார். அவர் என்னை எப்படியாவது வெளியே எடுத்துடு மா என்னால ஜெயில்ல இருக்க முடியாது, நாளைக்கே கோர்ட்ல நான் பண்ண தப்பு நிரூபணம் ஆகிட்டா எனக்கு பெரிய தண்டனை கிடைக்கும், என்னால இருக்க முடியாது எப்படியாவது வெளியே கொண்டுவாருங்கள் என்று சொல்கிறார்.

இதைக் கேட்ட ஷர்மிளா உனக்கு நான் உதவி பண்றேன், இந்த கேசில் இருந்து வெளியே கொண்டு வரேன் ஆனா ஒரு கண்டிஷன் நா சொல்ற பையன்கள் தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும், பாரதியோட சேப்டர் எப்பயோ முடிஞ்சு போச்சு, இனிமே அவளை உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன். இதுக்கு ஓகே நா சொல்லு உன்னை நான் வெளியே இருக்கிறேன் என கூற வெண்பா முடியாது என கூறுகிறார். அப்படினா என்ன அதையும் உன்னை வெளியே எடுக்க முடியாது நீ செஞ்ச தப்புக்கு என்ன தண்டனையோ அதை அனுபவித்துவிட்டு வெளியே வா. உனக்கு நாளைக்கு வரைக்கும் டைம் இருக்கு உன்னை கோர்ட்ல பார்க்கிறேன் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் பாரதி அனுபவம் இல்லாத கண்ணம்மாவை அட்மினா எப்படி எடுத்தாங்க? இது சாதாரணமா விஷயமா? விக்ரம் உங்கள் கிட்ட இத பத்தி பேசணும் என முடிவு செய்கிறார் அந்த நேரத்தில் விக்ரம் பாரதியைப் பார்க்க வருகிறார். பிறகு பாரதி கண்ணம்மா பற்றி சொல்ல விக்ரம் யார் என அட்வைஸ் பண்ணாலும் கடைசி முடிவு என்னுடையதாக தான் இருக்கும். கண்ணம்மாவை நான் அப்படித்தான் வேலைக்கு எடுத்தேன். அவங்க சீக்கிரம் கத்துப்பாங்க அதுக்கு அப்புறம் நீங்களே கண்ணம்மாவை வேலைக்கு எடுத்தது சரிதான் என சொல்வீங்க என கூறுகிறார். நான் சொல்றது ஏன் யாருக்குமே புரிய மாட்டுது என வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 23.04.22
Bharathi Kannamma Serial Episode Update 23.04.22