Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரோகித்தால் கடுப்பான வெண்பா.. உற்சாகத்தில் லட்சுமி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா சந்தோஷத்தில் கேசரி செய்ய அதனைப் இன்னொரு இடம் கொடுக்கப் போவதாக லட்சுமி வெளியே கிளம்பிய நேரத்தில் அவருடைய அப்பா வீட்டுக்கு வர கண்ணம்மா சந்தோஷத்தில் அப்பாவின் மீது சாய்ந்து கொள்கிறார். இந்த நேரத்தில் லட்சுமி வந்துவிட அவரிடம் இவர்தான் என்ன பெத்த அப்பா உன்னுடைய தாத்தா என சொல்ல இருவரும் பாசத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்தப் பக்கம் வெண்பா எல்லோரும் என்னுடைய முதுகில் குத்துகிற யாரை நம்பு றது யாரை நம்பக் கூடாதுன்னு தெரியல என அழுது கொண்டிருக்க சாந்தி பாரதியை மட்டும் நம்பவே நம்பாதீர்கள் ரோஹித்தை கல்யாணம் பண்ணிக்கங்க என அறிவுரை கூற அந்த நேரத்தில் ரோஹித் எம்ஜிஆர் படத்திலிருந்து பாடல்களுக்கு ஆட்டமாடி வெண்பாவை வெறுப்பு ஏற்றுகிறார்.

இந்தப் பக்கம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அப்போது ஹேமா வந்து என்னுடைய அம்மா யாரு அவங்க எங்க இருக்காங்க உண்மையாகவே அவங்க இறந்து போய்ட்டாங்களா என கேள்வி மேல் கேள்வி கேட்க இதற்கு பாரதி தான் பதில் சொல்ல முடியும் என கூறி விடுகின்றனர். சரி விடுங்க எங்க அம்மா இல்லைன்னு நினைக்கிறேன். ஆனா அதுக்காக அப்பாவை இப்படியே விட்டுடுவீங்களா? எனக்கு சமையல் அம்மாவை ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கும் அப்பாவை பிடிக்கும் அவங்கள அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சா என்ன? நான் அவங்கள இது அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு வர தான் போறேன் என சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update