தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவிடம் பேசிவிட்டு மேலே சென்றதும் சௌந்தர்யா இறங்கி வந்து கண்ணம்மாவிடம் என்ன நடந்தது என கேள்வி எழுப்புகிறார். உங்க புள்ளைக்கு எல்லா உண்மையையும் தெரிஞ்சிருக்கு என சொல்ல சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். ஹேமா என் பொண்ணு நீ சொன்னதும் அவர் பெருசா அதிர்ச்சி அடையல. நீ இதை தான் சொல்லுவனு எனக்கு ஏற்கனவே தெரியும். உனக்கு பிரசவம் பார்த்த என்கிட்டயே வந்து எனக்கு பிறந்தது இரட்டை குழந்தைனு அடித்து விட்டவ தானே நீ, அப்பவே தெரியும் ஒரு நாள் வந்து ஹேமா என்னுடைய குழந்தையை சொல்லுவனு என பாரதி சொன்னதை கூறுகிறார். எங்க அம்மா அப்படி செய்ய மாட்டாங்க ஒருவேளை அவங்க அப்படி தெரிந்திருந்தால் அதை மன்னிக்க மாட்டேன் என சொன்னதை சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். லட்சுமி பற்றி சமூகத்தில் என்ன சொன்னான் என கேட்க நீ ஒருவன் தான் அப்பா என சொன்னால் லட்சுமியிடம் நான் அந்த வருண் தான் உன்னுடைய அப்பா என சொல்வது மட்டும் அல்லாமல் போட்டோவை காட்டுவேன் என சொல்கிறார் என கூறுகிறார்.
இப்போ நான் என்னதான் பண்றது உங்க புள்ள பொய்யோடுவே வாழ பழகி விட்டார் இனி அவரைப் மாத்தவே முடியாது என கூறுகிறார். அவன் என் வயித்துல தான் பொறந்தானா என சௌந்தர்யா ஒரு பக்கம் கண் கலங்குகிறார். அப்பா வருவார் என்று நம்பி கிட்டு இருக்க என் பொண்ணு லட்சுமிக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் என் கண்ணம்மா கேட்க பொய் சொல்லு என சௌந்தர்யா கூறுகிறார். ஒன்பது வருஷமா இன்னும் சந்தேகத்தோடு வாழுற அவன் உனக்கும் உன் குழந்தைக்கும் எதுக்கு? இனிமேல் உங்க அப்பா வர மாட்டாரு, வாழ்நாள் முழுக்க உனக்கு நா மட்டும்தான் என சொல்லு என்று கூறுகிறார். இதைக் கேட்ட கண்ணம்மா நீங்க ஈசியா சொல்லிட்டீங்க ஆனா வாழ்நாள் முழுவதும் பழியை சுமக்க போறது நான்தானே என கூறுகிறார்.
உங்க பையனுக்கு உண்மையை புரியவைக்க யாரும் தேவையில்லை ஒரு ஹாஸ்பிட்டலுக்கு அவரை கட்டி தூக்கி போட்டு எடுத்துக்கொண்டு போய் டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க என கண்ணம்மா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மேலே சென்ற பாரதியிடம் வெண்பா என்ன நடந்தது என கேட்க அப்புறம் சொல்கிறேன் என பாரதி கூறிவிடுகிறார். பிறகு கேக்கை வெட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்து விட்டு லட்சுமி மற்றும் ஹேமா கண்ணம்மாவை அழைத்து வர செல்கின்றனர். எனக்கு மேலே சென்றதும் கேக்கை வெட்ட தயாரான போது அம்மா ஒரு நிமிஷம் என கண்ணம்மாவை தடுத்து நிறுத்தி லட்சுமியோட அப்பா யாருனு சொல்றதா சொன்னிங்க யார் எனக் கேட்கிறார். லட்சுமியுடன் முகத்தைப் பாருங்க அவ எப்படி இருக்கா என கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கிறார் ஹேமா. உடனே லட்சுமியும் யார் என்னுடைய அப்பா என கேட்க கண்ணம்மா இவ்வளவு நாளா உனக்கு தெரியாத விஷயத்தை இப்போது சொல்கிறேன். இதனால எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை, பத்து நாளா நீ ஆவலாக காத்திருந்ததுக்கு விமோர்சனம் கிடைக்கட்டும் எனக்கு ஒரு இவர் தான் உங்க அப்பா என பாரதியை கை காட்டுகிறார். இவ்வளவு நாளா நீ டாக்டர் அங்கிள் என கூப்பிட்டுக் கொண்டு இருந்தவர் உனக்கு அங்கிள் இல்லை அப்பா என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இனிமே நீ அவரை வாய் நிறைய அப்பா என கூப்பிடலாம் என சொல்கிறார் கண்ணம்மா. ஹேமா அதிர்ச்சியோடு பார்க்கிறார். இன்னொரு பக்கம் லட்சுமி பாரதியைப் பார்த்து சிரிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
