விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமா சௌந்தர்யா அஞ்சலி மற்றும் அகிலனிடம் நான் கண்டிப்பாக சமையல் அம்மாவை அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி விடு அம்மாவா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன் என கூறுகிறார். சௌந்தர்யா அது எல்லாம் எதுவும் செய்யாத நான் சொல்ற வரைக்கும் அமைதியா இரு என கூறுகிறார்.
இந்த பக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ள சௌந்தர்யா மற்றும் வேணு ஆகியோர் ஆசிரியையும் அவருடைய கணவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். விஷயமறிந்த கண்ணம்மா உள்ளே சென்று எதுக்கு இப்படி சண்டை போடுறீங்க என கேட்க இருவரும் ஒருவர் மீது ஒருவர் உள்ள அன்பில் சண்டைப் போடுகின்றனர் என தெரியவருகிறது. பிறகு பாரதி ஆகிய வந்து அவர்களிடம் அறிமுகமாகி பின்னர் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்.
இந்த பக்கம் ரோஹித் நண்பர் போன் செய்து கடன்காரன் வீடு தேடி வந்து பணம் கேட்கிறான் இந்த அம்மாவ உள்ள வச்சு பூட்டிட்டான் என சொல்ல இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இன்னும் ஒரே நாளில் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எப்படியாவது ஏற்பாடு பண்ணு என சொல்லி போனை வைக்கிறார்.
பின்னர் ரோஹித் குளித்துக் கொண்டிருக்கும்போது சாந்தி வந்து ரூமை பெருக்க அப்போது போன் அடிக்க அதை எடுத்து பேசுகையில் ரோஹித்தின் நண்பர் பணம் ரெடி பண்ணிட்டியா என உளறி கொட்ட பிறகு சாந்தி குரல் கேட்டு ராங் நம்பர் போல பேசி போனை வைத்து விடுகிறார். ஆனால் சாந்திக்கு சந்தேகம் வந்துவிட கூடிய விரைவில் நீ யாருன்னு கண்டு பிடிக்கிறேன் என மனதுக்குள் சொல்லிக் கொள்ள இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.