தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் சாந்தி ரோஹித்துக்கு வந்த ஃபோன் கால் பற்றி சொல்ல வெண்பா இதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.
இந்த பக்கம் மருத்துவமனையில் மனைவியின் சிகிச்சைக்காக தம்பதியினர் ஒருவர் வந்து இருக்க அவருக்கு பரிசோதனை மேற்கொள்ள பாரதி உள்ளே அழைத்துச் செல்ல அவருடைய கணவர் வெளியே நின்று கதறி திருமணபந்தம் குறித்து கண்ணம்மாவிடம் பேசுகிறார்.
ஸ்கூலில் ஹேமா தனியாக யோசனையில் இருக்க அப்போது வந்த லட்சுமி என்னை ஏது என விசாரிக்க அப்பா யாரையோ விவாகரத்து செய்ய இருந்தாரு நான் அழுது அதை தடுத்து நிறுத்திட்டேன். அப்பா யாரு விவாகரத்து செய்ய இருந்தாரு அப்போ எங்க அம்மா எங்கேயோ உயிரோட இருக்காங்கன்னு தானே அர்த்தம். அவங்கள நான் ஒரு முறையாவது பார்க்கணும் என சொல்ல லட்சுமி ஹேமா சொல்வதிலும் ஒரு லாஜிக் இருக்கு அப்பாவை கண்டுபிடித்த மாதிரி ஹேமாவோட அம்மா யாருன்னு கண்டுபிடிக்கணும். ஒருவேளை என் அம்மா தான் ஹேமாவோட அம்மாவா என லட்சுமிக்கு சந்தேகம் எழுகிறது.
வீட்டில் ரோஹித் பணத்துக்கு என்ன செய்யலாம் என யோசித்து சர்மிளா ஆண்டியிடமே கேட்கலாம் என முடிவு செய்து அவருக்கு போன் போடுகிறார். சர்மிளாவுக்கு போன் போட்டேன் ரோஹித் என்னுடைய அக்கவுண்ட் இன்கம்டாக்ஸ் பிரச்சனையால முடக்கப்பட்டுள்ளது. என்னுடைய கம்பெனியில் வேலை செய்யும் பெண்ணுக்கு கல்யாணம் 2 லட்சம் ரூபாய் கிப்ட் பண்ணனும். உடனே பணம் தேவைப்படுகிறது என சொல்ல ஷர்மிளா 5 லட்சம் ரூபாய் ஆக அனுப்பி வைக்கிறேன் இதில் என்ன பிரச்சனை. அது எல்லாம் நீங்க திருப்பி தர வேண்டாம் உங்க கம்பெனியில் வேலை செய்யும் பெண்ணுக்கு நான் கிப்ட் கொடுத்ததாக இருக்கட்டும் என கூறுகிறார்.
இதையெல்லாம் ஒட்டு கேட்ட சர்மிளாவின் வெண்பாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சி அடைந்து இதை எப்படியாவது கண்டுபிடித்து ரோஹித் என் முகத்திரையை கிழிக்க வேண்டுமென முடிவு செய்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.