Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாயாண்டியால் கடுப்பான வெண்பா.. கண்ணம்மாவிற்கு ஆறுதல் சொன்ன லக்ஷ்மி.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 26.02.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவின் பிறந்தநாள் பங்ஷனை முடித்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டிற்கு வந்ததும் சௌந்தர்யா பாரதியை பாராட்டிப் பேசுகிறார். லட்சுமிக்கு எப்படி சொல்லி புரிய வைக்க வேண்டும் அப்படி அழகா சொல்லி புரிய வச்சிட்ட. நீ சொல்லு ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப சரியாக இருந்தது. நீ எங்கு வந்து இறங்கினதும் என்ன நடக்க போகுதோன்னு பயந்து கிட்டே இருந்தேன். ஆனா நீ படித்த பண்புள்ள டாக்டர் என்பதை நீ வார்த்தையால நிரூபித்து விட்ட‌. கண்ணனைப் பற்றி உன் மனசுக்குள்ள ஏதோ ஒரு வாரத்தில் நல்ல அபிப்ராயம் இருக்குன்னு தெரிஞ்சு கிட்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் பழைய பாரதியை பார்த்தேன். இதுதான் நீ இப்படித்தான் இருப்ப என சொல்கிறார்.

எனக்கு லஷ்மியை ரொம்ப பிடிக்கும் அதனால அவ கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் தான் அப்படி பேசினேன். மத்தபடி நீ எந்த உள்நோக்கமும் இல்லை நீங்களா எதுவும் புரிஞ்சுக்கங்காதீங்க. அந்த கண்ணம்மா மேல எனக்கு எந்த கரிசனமும் இல்லை என கூறுகிறார். என்னை எதுக்கு உங்க பக்கம் இழுக்க பார்க்கறீங்க என பாரதி கேட்க எங்க பக்கம் தான் வாயேண்டா என கேட்கிறார். நான் ஒரே ஒரு கேள்வி கேட்கட்டுமா என சொல்லிவிட்டு பாரதி என்ன நீங்க தான் பெத்தாங்களா இல்ல ஏதாவது ஆசிரமத்தில் இருந்து விட்டு வந்தீர்கள் என கேட்க சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார்.

வாடா இதுக்கு இப்பவே ஒரு முடிவு கட்டறேன் என பாரதியை அழைத்து கொண்டு வெளியே கிளம்புகிறார் சௌந்தர்யா. உடனே எங்கே எனக் கேட்க வா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கலாம் அப்ப தெரிஞ்சிடும் நீ எனக்கு தான் பொறந்தே இல்லையானு என கூறுகிறார். நான் வந்தா எதுவும் லூசு மாதிரி பேசறான் நீங்களும் எம்மா இப்படி பண்றீங்க என அகிலன் கேட்க பெத்தபுள்ள அப்படிக் கேட்கும்போது எப்படி நான் அமைதியா இருக்கிறது என கூறுகிறார்.

திரும்பவும் பாரதி பதில் சொல்லுங்க அம்மா என கேட்க நீ எதுக்கு இப்படி கேள்வி கேட்ட என சௌந்தர்யா கேட்கிறார். நான் உங்க புள்ளையா இருந்து இருந்தா நீங்க சொல்றதெல்லாம் கேட்டிருக்கணும் நீங்க ஆடுற நாடகத்துல நானும் நடித்து இருக்கும். ஆனா நான் எதையுமே கேட்கலையே. அகிலனை பாருங்க நீங்க என்னதான் திட்டினாலும் அவன் உங்ககிட்ட தான் வருவான். அவன் இங்கே மாடியில் இருந்து குதித்து சொன்னாலும் குதித்து விடுவான் என கூறுகிறார். பெத்த புள்ளையை எந்த அம்மாவும் மாடியிலிருந்து குதிக்க சொல்ல மாட்டார் என சௌந்தர்யா சொல்ல என்ன குதிக்க சொல்றீங்களே என பாரதி கூறுகிறார். ‌ ‌‌ ‌‌ ‌‌

நான் ஒரு விஷயம் பண்ணும்போது அதுல கொஞ்சமாவது என் பக்கம் நியாயம் இருக்குன்னு யாரும் இந்த வீட்டில யோசிக்கிறது இல்ல. இந்த வீட்டுல இவ்வளவு பேர் இருந்தும் நான் தனியாகத்தான் இருக்கிறேன். என்னுடைய கவலை, வருத்தத்தை சொல்றதுக்கு எனக்கு யாருமே இல்ல என கண்கலங்கி விட்டு இனிமே என்ன காயப்படுத்தாதீர்கள் என சொல்லிவிட்டு மேலே சென்று விடுகிறார். பாரதி வருத்தப்பட்டு பேசியதை கேட்டு விடுகிறார் ஹேமா.

இந்தப்பக்கம் கண்ணம்மா வருத்தமாக அமர்ந்து கொண்டே இருக்க அங்கு வந்த வாய்தா வடிவுக்கரசி பிரச்சனைக்கு தான் உன் புருஷன் பாரதி அழகா தீர்வு சொல்லிட்டு போயிட்டாரு. அவர் சொன்னது லட்சுமி அப்படியே கேட்டு விட்டார் என கூறுகிறார். இனிமே லட்சுமி அப்பா யார் என்று கேட்டு உன்னை தொந்தரவு பண்ண மாட்டார். பாரதி மனசுலயும் உன்ன பத்தி நல்ல எண்ணம் இருக்கு. எல்லா பிரச்சனையும் சரியாகி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வீர்கள் என கூறுகிறார். அந்த எண்ணத்தை எல்லாம் நான் குழி தோண்டி புதைத்து விட்டேன். வேறு எந்த கெட்டதும் நடக்காமல் இருந்தால் போதும் என கூறுகிறார்.

இந்த பக்கம் சாந்தி கண்ணம்மாவை எப்படி அசிங்கப்பட்ட உங்க கால்ல விழுந்து விழுந்து கதறினார் என வெண்பாவிடம் கேட்டுக் கொண்டிருக்க அவர் கடுப்பாகிறார். ‌ அவ்வளவு பேர் முன்னாடி பாரதி கண்ணம்மா பாராட்டி பேசுறான். நீதான் இந்த உலகத்திலேயே சிறந்த அம்மா என்று சொல்லும்போது எனக்கு அப்படியே பத்திக்கிட்டு எரிஞ்சது. பாரத ரத்னா இது அதுல அவளுக்கு விருது மட்டும் தான் கொடுக்கல. நான் அவ மனசுல பதிய வைத்திருக்க பொய்யெல்லாம் வேஸ்டா போச்சா? பாரதி மனசுல கண்ணம்மா மேல இன்னமும் பாசமும் காதல் இருக்கு என புலம்புகிறார். இந்த நேரத்தில் வந்த மாயாண்டி என்னை பாரதி கண்ணம்மா பாராட்டி பேசினானாம்? பார்த்து நடந்துக்கோங்க, அப்புறம் உங்களுக்கு அல்வா கொடுத்துற போறாரு. ஏற்கனவே சொன்ன மாதிரி நீங்க கடைசி வரைக்கும் இலவு காத்த கிளியாய் காத்து கொண்டு தான் இருக்கணும் என சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் வெண்பா இன்னும் வெறுப்பாகிறார்.

இந்த பக்கம் லட்சுமி கண்ணம்மாவை கூப்பிட்டு பாரதி அங்கிள் சொன்ன பிறகுதான் நான் உன்னை பற்றி யோசித்தேன். இனி நான் அப்பாவைப் பற்றி கேட்கவே மாட்டேன். எனக்கு அப்பா அம்மா இரண்டுமே நீதான் என கூறுகிறார். இதனால் கண்ணம்மா கண்கலங்க கண்ணீர் துடைத்து விட்டு ஆறுதல் கூறுகிறார் லட்சுமி. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 Bharathi Kannamma Serial Episode Update 26.02.22

Bharathi Kannamma Serial Episode Update 26.02.22