தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாரதி இரண்டு குழந்தைகளையும் உட்கார வைத்து அவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். பிறகு கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்கிறார்களோ அவர்களுக்கு முத்தம் கொடுப்பேன் என கூறுகிறார். எனக்கு முத்தம் எல்லாம் வேண்டாம் பெரிய சாக்லெட் வாங்கித் தரனும் என ஹேமா கேட்க சரி ஓகே என கூறுகிறார்.
பிறகு பாரதி சொல்லிக் கொடுத்த பாடத்தில் இருந்து கேள்விகளை கேட்க ஹேமா அடுத்தடுத்து பதில் சொல்ல அவருக்கு முத்தம் கொடுக்கிறார். பிறகு லட்சுமி நானும் சரியான பதில் சொன்னாள் எனக்கும் ஹேமாவுக்கு தர மாதிரி முத்தம் கொடுப்பீங்களா எனக் கேட்க அதுக்கு என்ன தந்துட்டா போச்சு என பாரதி கூறுகிறார். பிறகு பாரதி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல லட்சுமிக்கு தொடர்ந்து முத்தம் கொடுக்கிறார். மொத்தம் 15 கேள்வி கேட்டதில் பற்றி கேள்விக்கு பதில் சொல்லி முத்தத்தை வாங்குகிறார் லட்சுமி.
அதன்பிறகு லட்சுமி ஹேமாவிடம் பாரதி அப்பாவும் இங்கே தான் தூங்குவாரா? எனக் கேட்க ஆமாம் நான் அப்பா கைமேல தலையை வைத்து தூங்கி விடுவேன் என கூறுகிறார். கதையெல்லாம் சொல்லுவாரா எனக் கேட்க தினமும் கதை சொல்லி தான் தூங்க வைப்பாரு என கூறுகிறார். பிறகு பாரதி வந்து ரெண்டு பேரும் தூங்கலையா எனக் கேட்க நீங்க கதை சொல்லுங்க என சொன்னதும் பாரதி சரி ஓகே என படுத்துக்கொண்டே கதை கூறுகிறார். ஹேமா பாரதியை கட்டி அணைத்துக் கொண்டு படுத்து கொள்கிறார். பிறகு லட்சுமி இதை வேடிக்கை பார்த்துவிட்டு டாக்டர் அப்பா நானும் உங்க கூட இப்படி படுத்துக்கவா எனக் கேட்க பாரதி வா என்று சொன்னதும் ஆசையாக ஓடிச்சென்று பாரதி பக்கத்தில் படுத்துக் கொள்கிறார். பாரதி சொல்லும் கதையைக் கேட்டு இருவரும் தூங்கி விடுகின்றனர்.
இந்த பக்கம் கண்ணம்மா சௌந்தர்யா சொன்னதைக் கேட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். லட்சுமி அவர்கிட்ட எதையாவது கேட்கப்போய் அவர் எதையாவது சொல்லி விடப் போகிறார் என வாய்தா வடிவுகரசியிடம் நடந்ததைக் கூறி வருத்தப்படுகிறார். இனிமேல் லட்சுமியை அங்கே இருக்க விடக்கூடாது நான் இப்பவே போய் கூட்டிட்டு வரேன் என குமார் அண்ணாவுக்கு போன் செய்து அவரை வரவைத்து பாரதி வீட்டிற்கு செல்கிறார்.
சௌந்தர்யா உடன் பாரதி ரூமுக்கு சென்று கதவை தட்டி லட்சுமியை அனுப்புங்க என கேட்க அவ தூங்கிட்டா இப்ப எதுக்கு அவளை கூப்பிட்டுற என பாரதி கேட்கிறார். அவை இல்லாம என்னால இருக்க முடியாது என கண்ணம்மா சொல்ல இதையெல்லாம் கேட்ட லட்சுமி அப்பாதான் யாருன்னு சொல்லல, நான் கண்டுபிடிச்சிட்டேன் அவருடன் இருக்க கூட விடமாட்டீங்களா என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். பிறகு சரி இரு நானே எடுத்துகிட்டு வரேன் என பாரதி லட்சுமியை தட்டி எழுப்ப அவர் எனக்கு நல்ல தூக்கம் வருது என புரண்டு படுத்துக் கொள்கிறார். ஒரு குழந்தையைக் கூட தூக்க தெரியல என்று சொல்லிவிட்டு கண்ணம்மா லட்சுமியை தட்டி எழுப்ப என்ன தொந்தரவு பண்ணாத நான் தூங்க போறேன் என எழுந்து கொள்ளாமல் தூங்குவது போல நடிக்கிறாள். பிறகு உங்கள் குழந்தையை எதுக்கு இப்படி பண்ற என பாரதி சத்தம் போட எண்ணமோ பண்ணுங்க என சொல்லிவிட்டு கண்ணம்மா அங்கிருந்து கிளம்பி வருகிறார். எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல சௌந்தர்யா எல்லாம் நல்லாதான் நடக்கும் நீ போ நாளைக்கு அவளை அனுப்பி வைக்கிறேன் என சொல்லி அனுப்பி வைக்கிறார். இதையே நினைத்துக் கொண்டு ஆட்டோவில் வருகிறார் கண்ணம்மா. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
