Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அம்மாவிடம் கண்ணீர்விட்டு அழுத வெண்பா.. கண்ணம்மா வெண்பாவிற்கு கொடுத்த ஷாக்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 29.04.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் வெண்பா ஷர்மிளா சொன்ன வார்த்தைகளால் என்ன செய்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்க அப்போது சாந்தி பாரதிக்கு உங்க மேல கொஞ்சம் கூட காதலே இல்ல இனிமேலும் நேரத்தை வீணடிக்காதீர்கள். அம்மா சொல்ற மாதிரி ஒரு நல்ல பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கை இல்ல நல்லா இருக்கா பாருங்க என கூறுகிறார்.

உடனே வெண்பா கண்ணீர்விட்டு பாரதியை நான் எவ்வளவு வெறித்தனமா காதலிக்கிறேன். அவனுக்காக இதுவரைக்கும் என் எல்லாம் செய்து இருக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். காலேஜ் படிக்கும் போதிலிருந்தே அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவன் மேல உயிரையே வச்சிருக்கேன். சின்ன வயசுல இருந்து ஒரு சின்ன விஷயத்தை ஆசைப்பட்டார் கூட அதை எங்க அம்மா நிறைவேற்றி வச்சுடுவாங்க. ஆனா இப்போ என் வாழ்க்கையில எனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழக் கூடாதுன்னு சொல்றாங்க. சின்ன சின்ன ஆசை எல்லாம் நிறைவேற்றி இப்படி வாழ்க்கையின் சந்தோஷத்தோடு விளையாடினால் எப்படி என அறிகிறார். பிறகு சாந்தி யோசிச்சு முடிவு பண்ணுங்க என கூறிவிட்டு உள்ளே செல்கிறார். பாரதி நான் ஆசைப்பட்ட பொண்ணு கிடைக்கல நான் அப்படியே விட்டுட்டு போற ஆளு கிடையாது. பொண்ணு நீ எனக்கு கிடைக்கணும் இல்லனா யாருக்கும் கிடைக்கக்கூடாது என கூறுகிறார்.

இந்த பக்கம் கண்ணம்மா வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்போது வந்த நர்ஸ் பாரதியை பாராட்டி பேசுகிறார். கண்ணம்மாவும் பாரதி செய்த விஷயங்கள் பற்றி பெருமையாக கூறுகிறார். எல்லார் மனசுலயும் நல்ல இடம் பிடித்திருக்க நீங்க என்கிட்ட மட்டும் ஏன் இப்படி சந்தேகத்தோடு நடந்துகறீங்க, பத்து வருஷமா ஏன் அது மட்டும் மாறவே இல்லை என மனதுக்குள் குழப்பிக் கொள்கிறார்.

அதன் பின்னர் ஹேமா லட்சுமி சௌந்தர்யா மற்றும் கண்ணம்மா ஆகியோர் ஹாஸ்பிடல் கேன்டீனுக்கு சாப்பிடச் சொல்கின்றனர். இந்த நேரத்தில் டாடி நம்மளோட இருந்தா நல்லா இருக்கும் என ஹேமா சொல்ல சரி அப்போ அவளையும் கூப்பிட்டு விடலாம் என சௌந்தர்யா கூறுகிறார். அவர் இப்போ அவருடைய ஆஸ்பிட்டல்ல இருப்பாரு இங்கே எப்படி வரமுடியும் என ஹேமா கூறுகிறார். பிறகு பாரதியும் இந்த ஆஸ்பிட்டல்ல தான் வேலை செய்கிறான் என சொல்ல லட்சுமி ஹேமா என இருவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

பிறகு பாரதியை போய் சந்தித்து அவரை சாப்பிட கூப்பிடுகின்றனர். ரவுடி நீ என்னை இங்க என கேட்க ஸ்கூல் முடிச்சிட்டு இங்க வந்துட்டேன் இங்கேயே படிச்சிட்டு, ஹோம் ஒர்க் பண்ணிட்டு அம்மா வீட்டுக்கு போகும்போது கிளம்பிடுவேன் என கூறுகிறார். நானும் இனிமே இங்க வந்து ஹோம் ஒர்க் பண்ணிட்டு லட்சுமி அவங்க வீட்டுக்கு போகும் போது நான் நம்ம வீட்டுக்கு வந்து விடுவேன் என ஹேமா கூறுகிறார். ஹாஸ்பிடல் என பாரதி சொல்ல நாங்க விக்ரம் தாத்தாகிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டோம் என கூறுகிறார்.

அதன் பின்னர் பாரதி சாப்பிட அழைத்துச் செல்ல மேலே சென்ற அவர் நீங்க என்னமா இங்க இருக்கீங்க என சௌந்தர்யாவிடம் கேட்கிறார். ஹேமா சரியாக சாப்பிடவே இல்லை சமையல் அம்மாவை பார்க்கனும்னு சொன்னேன் அதனாலதான் அழைத்து வந்தேன் என கூறுகிறார். இந்த நேரத்தில் ஹாஸ்பிடலில் வேலை பார்ப்பவர் பேஷன்ட் வந்திருக்காங்க என்று பாரதியை அழைக்கிறார். உடனே பாரதி கிளம்ப ஹேமா அவரிடம் போனை கேட்டு வாங்குகிறார்.

சௌந்தர்யாவின் லட்சுமியும் புட் ஆர்டர் செய்ய சென்றுவிட்ட நிலையில் ஹேமா கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் வெண்பா என்ன அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போயிட்டு இப்போ நான் வெளிய வந்துட்டேன் இன்னமும் பாரதி எனக்கு ஒரு போன் கூட பண்ணல அவ மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கான். அவனையே கேட்டு விடலாம் என போன் செய்ய ஹேமா அடிக்கடி இவங்க எங்க அப்பாவுக்கு போன் பண்ணி அவரை டென்ஷன் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இனிமே இவங்க எங்க அப்பாவுக்கு போன் பண்ண கூடாது நீங்க பேசறீங்களா என சொல்லி சமையல் அம்மாவிடம் போன் கொடுக்கிறார் ஹேமா. பிறகு ஹேமாவும் எழுந்து சௌந்தர்யாவிடம் சென்றுவிட கண்ணம்மா போனை அட்டெண்ட் செய்து ஹாய் என சொல்கிறார். இதைப்பார்த்து வெண்பா அதிர்ச்சி அடைய இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 29.04.22
Bharathi Kannamma Serial Episode Update 29.04.22