தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பாவை ஹோட்டலில் பொண்ணு பார்க்க வந்திருப்பவர்களை விரட்ட திட்டத்தோடு ஹோட்டலுக்கு கிளம்பிச் செல்கிறார். அங்கு போனதும் முதலில் அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டு அவர்களை வியக்க வைக்கிறார் வெண்பா. பிறகு அவர்கள் சாப்பிட ஜூஸ் ஆர்டர் செய்ய வெண்பாவை என்ன வேண்டும் எனக்கேட்க அவர் எனக்கு எதுவும் வேண்டாம் என கூறி விடுகிறார். பிறகு வீட்டில் இருந்து நான் ஜூஸ் எடுத்து வந்து இருக்கும் அதை குடித்துக் கொள்ளட்டுமா என சொல்லி பையிலிருந்து சரக்கு பாட்டிலை எடுத்து சரக்கு சாப்பிட்டு அவர்களை கண்டமேனிக்கு பேச அவர்களும் வந்த இடம் தெரியாமல் ஓடி சென்று விடுகின்றனர்.
இந்த பக்கம் கண்ணம்மா வீட்டில் வேலை செய்து கொண்டிருக்க லட்சுமி கலர் டிரஸ் வந்து நிற்க யூனிஃபார்ம் போடலியா எனக்கு இன்னைக்கு ஸ்கூல்ல ஃபங்ஷன், அதனால கலர் டிரஸ்ல வரச் சொல்லி இருக்காங்க எனக் கூறுகிறார். என்ன பங்க்ஷன் என கேட்க பேச்சுப் போட்டியில் ஹேமா முதல் பரிசு வாங்கி இருக்க அவளுக்கு பிரைஸ் கொடுக்கிற பங்ஷன் நடக்குது என கூறுகிறார். நீ கலந்துகலையா என கேட்க நான் கலந்துக்கல என லட்சுமி கூறுகிறார்.
ஏன் எனக் கேட்க உலகில் சிறந்த அப்பா என்னுடைய அப்பா என்ற டாப்ப்பிக்கில் பேச வேண்டும் நான் என்ன பேசுவது? ஹேமாவுக்கு டாக்டர் அப்பா பாடம் சொல்லி தராரு, கதை சொல்றாரு, ஸ்கூலுக்கு கூட்டிட்டு வராரு, என சொல்லிக் கொண்டே போகிறார். அம்மா என்ன நீ பேசுவது டாக்டர் அப்பா தான் என்னுடைய அப்பா என தெரிந்தும் நான் அதை மேடையில் சொல்ல முடியுமா என வருத்தத்தோடு பேசுகிறார்.
பிறகு லட்சுமி உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கனும் பாட்டி கிட்டே கேட்டேன் அவங்க அப்புறம் சொல்றேன் சொன்னாங்க என சொல்கிறார். பிறகு கண்ணம்மா என்ன என கேட்க ஹேவோட அம்மா யாரு? டாக்டர் அப்பா வேறே கல்யாணம் பண்ணிக்கினாரா? அதனாலதான் நீ அவரை பிரிந்து வந்துட்டியா? என கேட்க இப்போதைக்கு இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என கூறுகிறார்.
நான் எங்க அப்பா யாரு நீ தேடி அலைந்தபோது நீங்க யாரும் பதில் சொல்லல, நானா தானே கண்டுபிடிச்சேன். அதே மாதிரி ஹேமா அம்மா யாரு என்பதையும் நானே கண்டுபிடிக்கிறேன் என சொல்லி விட்டு உள்ளே சென்று விடுகிறார். இதைக் கேட்ட கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். ஹேமா அம்மாவை கண்டுபிடிக்கிறேனு என்னவெல்லாம் பண்ண போறாளோ என வருத்தப்படுகிறார்.
இந்தப் பக்கம் வீட்டுக்கு வந்த வெண்பா நான் அடக்க ஒடுக்கமா அமைதியாகத் தான் பேசினேன் ஆனால் இந்த சம்பந்தம், வேண்டாம் உன்ன பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க வெண்பா சொல்ல ஏதோ ஆல்ககால் அப்படி இப்படின்னு சொன்னாங்க ஷர்மிளா கேட்க நீங்க நம்ம என்ன பரிசோதனை பண்ணிக்கோங்க எப்படி எல்லாம் பொய் சொல்லி இருக்காங்க என ட்ராமா போடுகிறார். சர்மிளா முதலில் மாப்பிள்ளை பார்க்க வந்தபோது வெண்பா செய்த வேலைகளை சொல்ல இதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.