தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பா வீட்டுக்கு போன பாரதி ஹேமாவை பேட்மிட்டன் கிளாஸ் சேர்த்துவிடலாம் இருக்கேன் எனக் கூறுகிறார். ஏதோ சொல்ல வந்த மாதிரி இருக்கே பாரதி என வெண்பா கேட்க ஆமாம் என்ன சரியா புரிஞ்சுக்கல நீ மட்டும் தான் என பாரதி சொல்கிறார். கோர்ட்டு தீர்ப்பு படி 6 மாசம் நான் கண்ணம்மா கூட சேர்ந்து வாழணும். ஆனா எனக்கு அதுல கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. நான் ஆறு மாசம் இங்க தங்கிட்டுமா என பாரதி கேட்கிறார். உடனே உற்சாகமான வெண்பா நீ எவ்வளவு நாளானாலும் தங்கிக் கொள் என சொல்கிறார்.
ஆனா ஒரு கண்டிஷன் நான் மட்டும் இங்க வர மாட்டேன் ஹேமாவும் கூட்டிட்டு தான் வருவேன் என சொல்கிறார். ஹேமா இல்லாம என்னால இருக்க முடியாது என பாரதி கூறுகிறார். இதனால் கடுப்பான வெண்பா, உன் கூட தனிமையில் சந்தோஷமாக இருக்கலாம்னு நினைச்சா இந்த ஹேமாவை கூட்டிட்டு வரேன்னு சொல்றான், முதல்ல சரின்னு சொல்லு அப்புறம் பார்த்துக்கலாம் என வெண்பா கணக்கு போடுகிறார். பிறகு சரி பாரதி வரட்டும் எனக்குத்தான் ஹேமாவை நல்லா தெரியுமே என வெண்பா கூறுகிறார். பிறகு பாரதி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இந்த விஷயத்தை சாந்தியிடம் சொல்லி உற்சாகம் அடைகிறார் வெண்பா.
இந்த பக்கம் குமார் அண்ணா தங்கச்சி பார்க்க வந்தவர்கள் கண்ணம்மா புருஷனோட இல்லாதவர். இந்த மாதிரி நல்ல விஷயத்துக்கு அவர் எப்படி முன்னாடி வந்து நிற்கலாம் என கண்டபடி பேச பிறகு லட்சுமி அவர்களை எதிர்த்துப் பேச இந்த பொண்ணு வேண்டாம் என கிளம்பி விடுகின்றனர். கிளம்பிய அவர்களை கண்ணம்மா நிற்க வைத்து இன்னும் சில நாட்கள்ல என்னோட பிறந்த நாள் நிகழ்ச்சி எங்க வீட்ல நடக்கப் போகுது. அன்னைக்கு என் பொண்ணோட அப்பா யாரென்று சொல்ல போறேன். வந்து பார்த்துக்கோங்க என கூறுகிறார். நீ உன் புருசன் கூட சேர்ந்து வாழ்ந்தால் எங்களுக்கு என்ன வாழலனா என்ன என அங்கிருந்து அவர்கள் கிளம்பி விடுகின்றனர். லட்சுமி உண்மையான அம்மா சொல்ற அப்பா உன்னோட பிறந்தநாளுக்கு வரப்போறாரா என கேட்கிறார். ஆமாம் என கூறுகிறார்.
வெண்பா வீட்டில் இருந்து வீட்டுக்கு வந்த பாரதி அனைவரையும் ஒன்றாக கூப்பிட்டு ஆறு மாசம் இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு சொல்லிட்டீங்க, அதனால நான் எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்க என் ஃப்ரெண்டோட வீட்டுல இருக்கலாம்னு இருக்கேன். அந்த பிரண்டு யாருமில்லை வெண்பா தான் என பாரதி சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் நான் மட்டும் தனியா போக போறது இல்லை ஹேமாவையும் கூட்டிட்டு போகப்போறேன். இனி அவள தனியா விட்டுட்டு போறதா இல்லை என சொல்கிறார். சௌந்தர்யா என்னமோ பண்ணி தொலை என உள்ளே சென்று விட அகில் அந்த வெண்பா நல்லவ இல்லை என கூறுகிறார். அஞ்சலியைக் கொல்ல பார்த்தவர் என சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியும் என பாரதி சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.
பிறகு உள்ளே போன அவர் ஹேமாவிடம் உனக்கு பேட்மிட்டன் பிடிக்கும் தானே என கேட்க ஆமாம் பிவி சிந்து மாதிரி வரணும் என சொல்கிறார். உன்ன கோச்சிங் கிளாஸ் சேர்த்துவிட போறேன் ஆனா இங்க பக்கத்துல எதுவும் கிளாஸ் இல்லை. உனக்கு வெண்பா தெரியும் தானே என பாரதி கேட்க தெரியும் என ஹேமா கூறுகிறார். அவங்க வீட்டு பக்கத்துல தான் கோச்சிங் கிளாஸ் இருக்கு அதனால ஆறு மாச அங்கிருந்து நீ கிளாசுக்கு போ. எனக்கும் என் கூட சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் செய்யுற வேலை இருக்கு. நானும் இங்கதான் இருப்பேன் எனக்கும் அது கொஞ்சம் வசதியா இருக்கும் என கூறுகிறார்.
முதலில் தயங்கிய ஹேமா நீங்க இருப்பீங்க நான் எனக்கு ஓகே தான் என கூறி விடுகிறார். பிறகு சரி நீ போய் விளையாடு என அவரை அனுப்பி வைக்கிறார். இதனையடுத்து சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவர் பாரதியை முறைத்துக் கொண்டே உள்ளே வருகின்றனர். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
