Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லஷ்மியால் பாரதி எடுக்க போகும் முடிவு.. ரோகித் செய்த செயல்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi-kannamma serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் லட்சுமி வீட்டிற்கு வந்து பாரதி தனக்காக பேசாததை நினைத்து வருத்தத்தோடு படித்துக் கொண்டிருக்கிறேன் அப்போது வந்த கண்ணம்மா என்னாச்சு என விசாரிக்க லட்சுமி எல்லா விஷயத்தையும் கூறுகிறார். நான் அப்பாகிட்ட கோபத்தில் எல்லாம் உண்மையிலும் சொல்லிட்டு நான் பண்ணது தப்புதான் இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன் என சொல்ல கண்ணம்மா இனி அவரை நீ எங்க பாத்தாலும் அப்பானு கூப்பிடு நீயும் எவ்வளவு நாளைக்கு தான் பொறுமையாக இருப்ப என கூறுகிறார்.

இதனையடுத்து லட்சுமி ஹேமா கிட்டையும் பாரதி தான் என்னுடைய அப்பா என்ற விஷயத்தை சொல்லிவிட வேண்டியதுதான் என நினைத்து மறுநாள் ஸ்கூலில் ஹேமாவிடம் என்னுடைய அப்பா யாருன்னு எனக்கு தெரிஞ்சுடுச்சு எனக்கு தெரியும் என சொல்ல ஹேமா ரொம்ப சந்தோஷப்படுகிறாள். யாரு எனக்கு கேட்க பாரதி டாக்டர அப்பா தான் எனக்கும் அப்பா என சொல்ல நீ சொல்றது உண்மையா என ஹேமா கேட்கிறார் ஆமாம் இது சௌந்தர்யா பாட்டி சித்தப்பா சித்தி தாத்தா என எல்லோருக்கும் தெரியும் என சொல்ல இந்த நேரத்தில் சௌந்தர்யா கண்ணம்மாவோடு வர ஹேமா இது குறித்து கேட்க சௌந்தர்யா ஆமாம் உன்னுடைய அம்மா கண்ணம்மா தான் அன்னைக்கு பாரதி போட்டோவில் காட்டியது உன்னுடைய அம்மா இல்லை என கூறி விடுகிறார்.

அதன் பிறகு பார்த்தால் பாரதி தூக்கத்தில் இருந்து அலறி எழுந்து கொள்கிறார். கனவில் கண்டது நிஜமானால் ஹேமா நிறைய கேள்விகளை கேட்பா. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது இதற்கு ஒரே வழி ஹேமாவை கண்ணம்மா மற்றும் லட்சுமியிடமிருந்து விலக்கி வைப்பது தான் என முடிவெடுக்கிறார்.

இந்த பக்கம் ரோஹித் போனில் தன்னுடைய அப்பாவிடம் பேசுவது போல பேசி போனை வைத்துவிட்டு ஷர்மிளாவிடம் தன்னுடைய அப்பா இதை கல்யாணம் வேண்டாம். அவர் சென்ட்ரல் மினிஸ்டர் பொண்ணு பார்த்து வச்சிருக்கேன்னு சொல்றாரு என சொல்கிறார். இப்ப என்ன பண்ணலாம் என சௌந்தர்யா கேட்க இந்த கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என ரோகித் சொல்ல வெண்பா மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi-kannamma serial episode-update
bharathi-kannamma serial episode-update