தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் குடிபோதையில் ரோஹித்தை பாரதி என நினைத்து ரொமான்ஸ் செய்யும் வெண்பா கடைசியில் அவருடன் சேர்ந்து எல்லை மீறி தப்பு செய்து விடுகிறார்.
இந்த பக்கம் பாரதி ரூமில் ஹேமா பக்கத்தில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்க அப்போது தூக்கத்தில் ஹேமா என்ன ஸ்கூலுக்கு அனுப்புங்க வீட்ல போரடிக்குது என புலம்புகிறார். ஆனால் பாரதி கண்ணம்மா மற்றும் லட்சுமியிடம் நீ பேசக்கூடாது அதை தடுப்பதற்காகவே உன்னை வேற ஸ்கூலுக்கு மாற்ற போகிறேன். என்னுடைய சந்தோஷத்துக்காக உன்ன கஷ்டப்படுத்துறேன்னு புரியுது ஆனால் எனக்கு வேற வழி தெரியல என பாரதி சொல்கிறார்.
இந்த பக்கம் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெண்பா தன்னுடைய நிலையை கண்டு அதிர்ச்சி அடைய குடி பாதையில் ரோஹித்துடன் தப்பு செய்த விஷயத்தை எண்ணிப் பார்த்து புலம்புகிறார். உடனடியாக அந்த இடத்தை விட்டு கிளம்பி வீட்டுக்கு சென்று விடுகிறார். பிறகு தூக்கத்திலிருந்து எழுந்த ரோகித் வெண்பாவுடன் சேர்ந்து தப்பு செய்த விஷயத்தை நினைத்து குஷி ஆகிறார்.
இந்த பக்கம் மறுநாள் காலையில் பாரதி ஹாஸ்பிடலுக்கு கிளம்ப அப்போது ஹேமா ஸ்கூலுக்கு போறேன் போர் அடிக்குது என சொல்ல நாளையிலிருந்து ஸ்கூலுக்கு போயிடுவ என பாரதி சொல்ல ஹேமா சந்தோஷப்படுகிறார். உடனே பாரதி இந்த ஸ்கூல் இல்ல புது ஸ்கூலுக்கு போக போற என சொல்ல ஹேமா எனக்கு இந்த ஸ்கூல் தான் புடிச்சிருக்கு என அழுகிறார்.
ஆனால் பாரதி உன்ன புது ஸ்கூல்ல சேர்க்குறதா நான் எப்பயோ முடிவு பண்ணிட்டேன் நீ டாடிக்கு பிராமிஸ் செய்து கொடுத்திருக்க அதனால அதை மீறக் கூடாது என சொல்ல ஹேமா அழுது கொண்டே சென்று விடுகிறார். பிறகு சௌந்தர்யா மற்றும் அகில் வந்து பாரதியிடம் இது பற்றி கேட்க இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.