தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் மினிஸ்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க அப்போது வந்த பாரதி அவரை சந்தித்து ரிப்போர்ட் பார்த்து ஒன்னும் பிரச்சனை இல்லை எல்லாம் சரியாகிவிடும் பார்த்துக்கலாம் என சொல்லிவிட்டு கீழே வருகிறார். பிறகு பாரதிக்கு போன் வர அவர் வேறு ஒரு ஆபரேஷன்காக வேறொரு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்.
இதனையடுத்து அட்மின் ஆபிஸர் கண்ணம்மா உள்ளே இருக்க அகிலன் மற்றும் அஞ்சலி இருவரும் ஹாஸ்பிடல் வர வழக்கம்போல ஸ்கூல் முடித்துவிட்டு லட்சுமியும் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்கிறார். கண்ணம்மா இவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்குமாறு அனுமதி கேட்டு உள்ளே அழைத்து வருகிறார்.
அதன் பிறகு என்ட்ரி கவுண்டரில் வேலை பார்க்கும் ஒரு பெண் கண்ணம்மாவை அழைத்து இன்னைக்கு மெயின்டனன்ஸ் டே வா என கேட்க ஏன் என்னாச்சு எனக்கு கண்ணம்மா கேட்டேன் லிஃப்ட் பிளம்பிங் என எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் வந்திருப்பதாக சொல்ல கண்ணம்மா அவர்களை ஒவ்வொருத்தராக சந்தித்து பேச சந்தேகம் எழுகிறது. பிறகு உடனடியாக இதை மினிஸ்டரின் பர்சனல் செக்யூரிட்டி இடம் சொல்ல வேண்டும் என கண்ணம்மா கீழே இறங்கி செல்ல அதற்குள் தீவிரவாத கும்பல் ஹாஸ்பிடலை சுற்றி வளைத்து விடுகிறது.
இதனால் ஹாஸ்பிடலில் பரபரப்பாகிறது. தீவிரவாதிகள் உள்ளே இருப்பவர்கள் அனைவரையும் பிணை கைதிகளாக ஒரு அறையில் அடைத்து வைத்து மினிஸ்டரை சுற்றி வளைக்க கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.