Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வழக்கறிஞரிடம் பேசிய பாரதி.. வெண்பாவுக்கு காத்திருந்த ஷாக்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னர் லட்சுமி தன்னுடைய அம்மாவிடம் ஹேமா சூப்பராக பேசியதாக பேசிக்கொண்டிருக்கிறார். எனக்கும் அப்பாவை பத்தி பேசணும்னு ரொம்ப ஆசை உன்கிட்ட பேசி காண்பிக்கவே என சொல்லிவிட்டு பாரதி பற்றி பெருமையாக பேசி விட்டு பின்னர் இதுவரைக்கும் நான் என்னுடைய அப்பாவை அப்பா என கூப்பிட்டதில்லை கொஞ்ச நாளாகத்தான் டாக்டர் அப்பா என கூப்பிடுகிறேன். ஆனா அவர் விவாகரத்து வாங்கி எங்க ரெண்டு பேரையும் விட்டு பிரிய நினைக்கிறார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே என்ன பிரச்சனை என எனக்கு தெரியாது ஆனால் என்னுடைய அப்பா இல்லாமல் என்னால் இருக்க முடியாது நாங்க எல்லோரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும். தயவு செய்து என்னை உங்க பொண்ணா ஏத்துக்கோங்க அப்பா என கண் கலங்கி அழ இதைக்கேட்ட கண்ணம்மாவும் ஒரு பக்கம் அழுகிறார்.

இந்த பக்கம் பாரதி தன்னுடைய வீட்டின் கார்டனில் உட்கார்ந்துகொண்டு வழக்கறிஞருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பிறகு வழக்கறிஞர் வந்ததும் அவரிடம் விவாகரத்து கிடைத்துவிடுமா எதுவும் பிரச்சனை வராதே என கேட்கிறார். அவரும் உங்களுடைய முடிவில் நீங்கள் உறுதியாக இருங்கள் எந்த பிரச்சனையும் கண்டிப்பாக வராது என சொல்கிறார். நான் விவாகரத்து வேண்டும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன் நீங்களும் உங்களுடைய தரப்பில் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருங்கள் என சொல்கிறார் பாரதி. இதையெல்லாம் ஹேமா ஓட்டு கேட்டு விடுகிறார். எனக்குத்தான் நான் பிறந்த உடனேயே அம்மா இறந்து விட்டதாக சொன்னார்களே அப்பா அம்மா ஒன்றாக இருந்தால் தான் டிவோர்ஸ் வாங்குவாங்க, அப்பா யாரிடம் டிவேர்ஸ் வாங்க போறாரு? என குழம்புகிறார்.

அதன்பிறகு வெண்பா தன்னுடைய வீட்டில் சாந்தி அழைத்து என்னுடைய பிரண்ட்டிற்காக இதை சமைத்தியா அதை சமைத்தியா எனக் கேட்கிறார். ஷர்மிளா வரப்போற மாப்பிள்ளைக்கு நான் சொன்னதெல்லாம் சமைத்தியா என கேட்கிறார். இந்த நேரத்தில் கார் ஹாரன் அடிக்க மாப்பிள்ளை தான் வந்திருக்கிறார் என ஷர்மிலா சொல்லே இல்லை என்னுடைய பிரண்டு தான் வந்திருக்கிறார் என வெண்பா கூறுகிறார்.

பிறகு வெண்பா வெளியில் சென்று தன்னுடைய நண்பர் என வீட்டிற்குள் அழைத்து வந்து ரோஹித்தை அறிமுகம் செய்ய ஷர்மிளா மாப்பிள்ளை இவர்தான் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு டீ, காபி என்ன சாப்பிடுறீங்க என கேட்க உங்களுக்கு என்ன பிடிக்கும்? வெண்பாவுக்கு என்ன பிடிக்கும்? என கேட்க ஷர்மிளா காபி எனவும் வெண்பாவுக்கு டீ எனவும் கூறுகிறார். பிறகு இரண்டையும் சேர்த்து குடிக்கிறார்.

பிறகு வெண்பாவை வெளியே அழைத்து செல்லட்டுமா என கேட்கிறார். ஷர்மிளா தாராளமாக கூட்டிட்டு போங்க, அதற்கு முன்னாடி ரெண்டு நிமிஷம் வெண்பா கிட்ட பேசிக்கிறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update