தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு வெண்பா கண்ணம்மாவை சுட்டு தள்ளிடுவாங்க நல்ல வேலை பாரதி வெளியே இருக்கான் என ரொம்ப சந்தோஷமாக இருக்க அப்போது ரோஹித் பாரதி ஹாஸ்பிடலுக்கு போய் செல்லும் விஷயத்தைச் சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.
பாரதிக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என சொல்ல பாரதி ராணுவ வீரர் ஒருவரை மருத்துவர் போல அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்குள் நுழைகிறார். இருவரையும் விசாரித்த தீவிரவாதிகள் டாக்டர் என்று சொன்னதை எடுத்து இரண்டு பேரையும் அழைத்துச் செல்கின்றனர். கண்ணம்மாவிடம் சில கேள்விகளை கேட்பதாக சொல்லி ராணுவ வீரரை பற்றி யார் இவர் என கேட்க சுதாரித்துக் கொள்ளும் கண்ணம்மா டாக்டர் தான் என சொல்கிறார். ஆனாலும் நம்பாத தீவிரவாதிகள் ஒரு நர்சிகன் விசாரிக்க அவர் அவர் டாக்டர் இல்லை, இந்த மருத்துவமனையில் பார்த்தது இல்லை என்ற உண்மையை உலறிவிடுகிறார்.
இதனால் தீவிரவாதிகள் இருவரையும் சிறை பிடித்து செல்கின்றனர். இதனால் கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறாள். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.