Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹாஸ்பிடலில் சிக்கிய ஹேமா..பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் போலீஸ் அதிகாரிகளிடம் சௌந்தர்யா, வேணு, விக்ரம் பேசிக் கொண்டிரக்கும் போது ஹாஸ்பிடலுக்கு செல்லும் சாப்பாட்டு வண்டியில் ஏறி மறைந்து கொள்கிறார் ஹேமா. இதை யாரும் கவனிக்காமல் வண்டி ஹாஸ்பிடல் சென்று சாப்பாட்டை டெலிவரி செய்ய ஹேமாவோடு சேர்த்து தீவிரவாதிகள் உள்ளே எடுத்துச் செல்ல மறைந்திருந்த இடத்திலிருந்து ஹேமா வெளியில் வந்து உள்ளே ஓடுகிறார். உடனே அகில், அஞ்சலி மற்றும் லட்சுமியை பார்த்து கட்டி பிடித்து அழுகிறாள்.

அதன் பின்னர் ஹேமா உள்ளே வந்த விஷயத்தை தீவிரவாத குழு தலைவரிடம் சொல்ல அவன் போலீசுக்கு போன் போட்டு நீங்க ஆஃபர் மேல ஆஃபர் கொடுக்கறீங்க. பாரதியோட பொண்ணு உள்ளே வந்திருக்கா என சொல்ல அவர்கள் அதிர்ச்சடைகின்றனர். இந்த பக்கம் சௌந்தர்யா உட்பட எல்லோரும் ஹேமாவை காணவில்லை என தேடி அலைந்து கொண்டிருக்க அப்போது போலீஸ் அதிகாரி வந்து எதுக்கு ஹாஸ்பிடல் உள்ள குழந்தையை அனுப்பினீங்க என சத்தம் போட இவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதனால் ஹாஸ்பிட்டலுக்குள் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவ இந்த பக்கம் கண்ணம்மா பாரதியை கூப்பிட்டு இங்க பாருங்க குழந்தைகளை காப்பாத்தணும் இங்க இருக்கவங்கள காப்பாத்தணும் ஹாஸ்பிடல் தீவிரவாதிகள் கிட்ட இருக்கு என்பது எல்லாம் மனதுல வச்சுக்காதீங்க. நீங்க உங்க மேல முழு நம்பிக்கை வைத்து இந்த ஆப்ரேஷன் செய்யுங்க நிச்சயம் நல்லதே நடக்கும் என அறிவுரை கூறுகிறார். பிறகு பாரதியும் டென்ஷனை தூக்கிப்போட்டு விட்டு ஆப்ரேஷன் செய்ய தயாராக இந்த பக்கம் துப்பாக்கி முனையில் லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் அழுது கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

  bharathi kannamma serial episode update

bharathi kannamma serial episode update