தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பி வெளியே வரும் பாரதி மற்றும் கண்ணம்மா அனைவரையும் வீட்டுக்கு அழைத்து வந்து ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார் சௌந்தர்யா. கண்ணம்மா இப்படியே வீட்டுக்கு கிளம்புவதாக சொல்ல அனைவரும் அவளை ஒரு நாள் மட்டும் வீட்டில் இருந்து விட்டு செல்லுமாறு வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இந்த பக்கம் டெஸ்ட் கொடுத்த பின்பு தான் கர்ப்பமாக இருப்பதாக ரிசல்ட் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் ரோஹித் கையில் ஸ்வீட்டுடன் வந்து எனக்கு விஷயம் எல்லாம் தெரியும் என சொல்ல இருவரும் அதிர்ச்சடைகின்றனர். கடைசியில் அவன் பாரதி மற்றும் கண்ணம்மா என எல்லோரும் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய விஷயத்தை சொல்ல இருவரும் நிம்மதி அடைகின்றனர். ஆனால் இவர்கள் ஏதோ விஷயத்தை மறைப்பதை ரோகித் தெரிந்து கொண்டு அது என்ன என கேட்க மழுப்பி விடுகின்றனர். முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்க முடியாது, கத்திரிக்காய் முத்துனா கடை தெருவுக்கு வந்து தான் ஆகணும் என சொல்லிவிட்டு போகிறான்.
பிறகு ஹேமா தூக்கத்தில் தீவிரவாதிகள் சுடுவது போல கனவு கண்டு அலறி எழுந்து அழ லட்சுமி கண்ணம்மா என எல்லோரும் ஆறுதல் கூறுகின்றனர். லட்சுமி உனக்கு பயமா இருந்தா என் கையைப் பிடிச்சுக்க என சொல்கிறார். நம்ம போய் கொஞ்ச நேரம் விளையாடலாம், விளையாடினா எல்லாம் சரியா போயிடும் என சொல்லி கூட்டிட்டு போக சௌந்தர்யா ரெண்டு பேரும் எவ்வளவு பாசமா இருக்காங்க, ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி என்று தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க என சொல்ல தெரிஞ்சிருச்சு அத்தை என கண்ணம்மா கூற சௌந்தர்யா அதிர்ச்சடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.