தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி வெண்பா பேசியதை நினைத்து கோபமாக வீட்டுக்கு வர பிறகு ஹேமா பாரதியிடம் வந்து ஸ்கூலில் நடந்த விஷயத்தை சொல்லி நாளைக்கு மிஸ் உங்களை வர சொன்னதாக சொல்கிறார். பிறகு பாரதி கண்டிப்பாக நான் வரேன் ஆனா இனி இதுபோல நடந்து கொள்ளக்கூடாது என அறிவுரை கூறுகிறார். அடுத்து சௌந்தர்யா பாரதியிடம் கண்ணம்மா பற்றி பேச பாரதி இதைப் பற்றி பேச வேண்டாம் என எழுந்து சென்று விடுகிறார்.
இந்த பக்கம் வெண்பா பாரதி முகத்தில் அடித்தாற் போல முடியாது என சொன்னதை சாந்தியிடம் சொல்லி கோபப்படுகிறார். அவனை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் என பேசிக்கொண்டு இருக்க அப்போது ரோஹித் போன் போட்டு கல்யாண தேதியை குறிக்க ஆண்டியிடம் பேச போவதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
அடுத்ததாக மறுநாள் கண்ணம்மா உடம்பு முடியாமல் படுத்து இருக்க லட்சுமி நீ ரெஸ்ட் எடு ஸ்கூலுக்கு வர வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என கிளம்பி விடுகிறார். பாரதி ஹேமாவுக்காக ஸ்கூலில் வந்து பேசி லெட்டர் எழுதி கொடுத்து கிளாசுக்கு அனுப்ப ஹேமா லட்சுமிக்காக பேச சொல்கிறார். ஆனால் பாரதியும் மிஸ்-ம் அவளுக்காக அவங்க அம்மா வந்து பேசுவாங்க என சொல்லி கிளாசுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.
இதனால் லட்சுமி வருத்தப்பட்டு கண்ணீர் விட வெளியே போன பாரதி மீண்டும் உள்ளே வந்து லட்சுமியை படிக்க வைப்பது நான்தான். அவளுக்கு அப்பா மாதிரி நானே அவளுக்காக லெட்டர் எழுதி தரேன் என எழுதிக் கொடுக்க இதை சௌந்தர்யா பார்த்து மகிழ்கிறார். லட்சுமியும் பாரதி எடுத்த முடிவால் சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.