விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் போதையில் ஒருவர் தனது மனைவிக்கு பிறந்தது தன்னுடைய குழந்தை இல்லை என பிரச்சனை செய்ய அங்கு வரும் பாரதி என்ன ஏது என விசாரிக்க என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்ணிட்டா, குழந்தை என்ன மாதிரி இல்ல, அது எனக்கு பிறந்தது கிடையாது என சொல்ல அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட் இருக்கு அதை எடுத்தால் எல்லா உண்மையும் தெரிந்துவிடும் என சொல்ல அவரும் டி என் ஏ டெஸ்ட் எடுக்க ஒப்புக் கொள்கிறார்.
பிறகு பாரதி ரூமுக்குள் வந்து இது பற்றி யோசித்துக் கொண்டிருக்க லட்சுமி போன் போட்டு தனக்காக ஸ்கூலில் அப்பாவாக பேசியதற்காக நன்றி நீங்க எனக்காக பேசுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என சொல்லி போனை வைக்கிறார். அடுத்து வெண்பா வீட்டுக்கு போக ஷர்மிளா அவளை அழைத்து உட்கார வைத்து உடல்நிலை குறித்து விசாரிக்கிறார். உன்ன பாத்தா ஃபுட் பாய்சன் ஆன மாதிரி தெரியல, பாய்சன் சாப்பிட்டு ட்ரீட்மென்ட் எடுத்த மாதிரி இருக்கு என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்ததாக கண்ணம்மா பாரதியை பார்க்க வந்த போது நீங்க பண்ண பஞ்சாயத்து ரொம்ப அருமையா இருந்துச்சு, எவ்வளவு பெரிய பிரச்சினையை சிம்பிளா முடிச்சிட்டீங்க. ஆனா இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு ஒன்னு தோணுச்சு ஊருக்கு தான் உபதேசம் உங்களுக்கு இல்ல. நம்ம வாழ்க்கையிலும் ஒரே ஒரு டெஸ்ட் எடுத்தா எல்லா பிரச்சினையும் முடிந்துவிடும் ஆனால் அதை ஏன் நீங்க பண்ண மாட்டீங்க? நாம டெஸ்ட் எப்போ வச்சுக்கலாம் என கேட்க பாரதி பதில் சொல்ல முடியாமல் தவித்து அங்கிருந்து வெளியே சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update