விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் லட்சுமி மற்றும் ஹேமாவை அழைத்துக் கொண்டு கண்ணம்மா காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்க அப்போது இருவரும் தாத்தாவை பற்றி பேசி வருத்தப்பட கண்ணம்மா ஆறுதல் கூறுகிறார். பிறகு லட்சுமி மற்றும் கண்ணம்மா வழியில் இறங்கிக்கொள்ள ஹேமா மட்டும் காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பாட்டி மயங்கி விழ ஹேமா உடனடியாக காரில் இருந்து இறங்கி சென்று அவருக்கு தண்ணீர் கொடுத்து எழுப்புகிறார். பிறகு உங்களை நானே வீட்டில் டிராப் பண்ணி விடுகிறேன் என அழைத்துச் செல்கிறார்.
இந்த பக்கம் வெண்பா பாரதி குடும்பத்திற்கு செய்த உதவியை பற்றி ஷர்மிளாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். இனிமே எல்லாம் நான் நினைச்ச மாதிரி தான் நடக்கும் எல்லாமே என் பக்கம் தான் என சந்தோஷப்படுகிறார்.
அடுத்து பாரதி அகிலன் என எல்லோரும் வேண்டுமிடம் எதுக்கு இப்படி ஒரு உண்மையை எங்களிடமிருந்து மறைச்சிங்க என அப்பாவிடம் சத்தம் போடுகின்றனர். பிறகு அம்மாவும் அப்பாவும் தனியாக பேசட்டும் என வெளியில் சென்று விட சௌந்தர்யா இனி உங்ககிட்ட பேச மாட்டேன் என கோபப்பட வேண்டும் நாம காதலிக்கும் போது தப்பு பண்ணா மன்னிப்பு கேட்கிற மாதிரி கேட்கட்டுமா என வேணு எழுந்து கொள்ள சௌந்தர்யா அதெல்லாம் வேண்டாம் என கூறி இனிமேல் இது மாதிரி எதுவும் மறைக்க கூடாது என சொல்கிறார்.
அடுத்து ஹேமா அந்த பாட்டியை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வர அங்கே பாரதி அம்மா என சொல்லி கொடுத்த போட்டோவுக்கு மாலை போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இவங்கதான் என்னுடைய உண்மையான பாட்டியா என ஹேமா அவர்களை கட்டிப்பிடித்து அழ பிறகு என் பொண்ணுக்கும் கல்யாணம் ஆகி இருந்தா உன்னை மாதிரி ஒரு பேத்தி இருந்திருப்பார் என சொல்ல அதைக் கேட்டு இன்னும் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.