Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரோஹித்தால் கடுப்பான வெண்பா.. அதிர்ச்சியில் சௌந்தர்யா குடும்பத்தினர்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi-kannamma serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பா ரோகித் நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார். சாந்தி வந்து நீங்க எவ்வளவு பெரிய பவர்ஃபுல் வில்லி உங்களை இப்படி புலம்ப வச்சுட்டாங்க என சொல்ல வெண்பா ரோஹித் செய்த விஷயங்களை கூறி புலம்புகிறார். பாரதியை காதலிப்பதாக சொன்னால் சிரிக்கிறான். இந்த விஷயத்தை உங்க அம்மா ஏற்கனவே சொல்லிட்டாங்க. நீங்க பாரதியை மட்டுமில்ல இன்னும் மூணு நாலு பேரை காதலித்து இருந்தால் கூட எனக்கு பிரச்சனை இல்லை என சொல்கிறான் என கூறுகிறார். இவனை ஓடவிட புதுசா திட்டம் போட வேண்டும் என கூறுகிறார்.

சாந்தி எத்தனை பேரோட வாழ்க்கைய நாசம் பண்ணி இருப்பிங்க என மனசுக்குள் நினைத்து சிரித்து விட இப்ப எதுக்கு சிரிச்ச என மனதில் நினைத்ததை அப்படியே சொல்லி அடிக்கிறார் வெண்பா. இந்தப் பக்கம் சௌந்தர்யா குடும்பத்தார் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து இருக்க பாரதியைத் தேடி வந்த ஹேமா அவர் வேலைக்கு கிளம்பி விட்டதாக சௌந்தர்யா சொன்னதும் அப்பாவிடம் ஒன்னு கேட்கணும் என கூறுகிறார்.

என்ன விஷயம் அது என அகிலன் கேட்க அப்பா யாரை டிவோர்ஸ் செய்ய போகிறார்? எங்க அம்மா செத்துப் போயிட்டதா சொன்னாங்க அப்படி இருக்கும் போது இப்ப யாழுக்கு டிவேர்ஸ் தருகிறார்? அப்படினா எங்க அம்மா உயிரோடுதான் இருக்கிறார்களா? என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். யாருன்னு சொல்லுங்க எங்க அம்மாவை உடனே பார்க்க வேண்டும் இல்லனா சமையலறை கூட்டிட்டு போய் எங்க அம்மாவைத் தேடி கண்டு பிடிக்கப் போகிறேன் என கூறுகிறார். இதனால் குடும்பத்தார் பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இந்தப் பக்கம் ரோஹித் கண்ணைக் கட்டிக்கொண்டு ஷர்மிளா அருகே வந்து காலையில் எழுந்ததும் உங்க பொண்ணு வெண்பா முகத்தில்தான் விழிக்க வேண்டும் என கண்ணை கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன் எங்கே அவ என கேட்டு அவளுடைய ரூமுக்கு கொண்டு போய் விடுமாறு கூறுகிறார். ஷர்மிலா ரெண்டு பேருக்கும் மேட்னி ஷோ டிக்கெட் போட்டு இருக்கேன். போய்ட்டு ஜாலியா படம் பார்த்துட்டு வாங்க என சொல்லி வெண்பா ரூமுக்கு அழைத்துச் சென்று விடுகிறார்.

வெண்பா ரூமுக்கு போன ரோகித் வெண்பாவை தூக்கத்திலிருந்து எழுப்பி அமர்க்களம் செய்கிறார். பிறகு படத்துக்கு போகலாம் வா என கூப்பிட அதெல்லாம் எங்க அம்மா அனுப்ப மாட்டாங்க என வெண்பா சொல்ல டிக்கெட் போட்டது அவங்க தான் என கூறுகிறார். பிறகு ஷர்மிளாவும் வந்து ரெண்டு பேரும் படத்துக்கு போயிட்டு வாங்க என கூறுகிறார். ரோஹித் நீங்க அத அப்படியே கடலோர கவிதை நடிகை மாதிரியே இருக்கீங்க என சொல்லி மாமியாரை வெக்க பட வைக்கிறார்.

இவர்கள் இருவரின் அலப்பறையை பார்த்து நான் பைத்தியமா ஆயிருவேன் போல என வெண்பா புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi-kannamma serial episode-update
bharathi-kannamma serial episode-update