Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணம்மாவிற்கு ஹேமா கொடுத்த அதிர்ச்சி.. லஷ்மி செய்யும் வேலை.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் லட்சுமி பிரின்சிபலை பார்க்கச் சென்றிருந்த நேரத்தில் ஹேமா லட்சுமிக்கும் அப்பா இல்ல எனக்கு அம்மா இல்ல நீங்க எங்க டாடி கல்யாணம் பண்ணிக்கிட்டா நாங்க ரொம்ப சந்தோஷமா இருப்போம். எல்லாரும் ஒரே வீட்டுல ஜாலியா இருக்கலாம். நானும் லட்சுமியும் அக்கா தங்கச்சி போல இருப்போம் என கூறுகிறார். ‌

இதைக் கேட்ட கண்ணம்மா அதிர்ச்சியாகி எதையும் பேசாமல் இருக்கிறார். இந்த நேரத்தில் லட்சுமி வந்து விட ஏன் டல்லா இருக்க என கேட்க எதுவும் இல்லை என கூறுகிறார் கண்ணம்மா. பிறகு இருவருக்கும் சாப்பாடு ஊட்டிவிட்டு இருவரும் கிளாசிக் கிளம்பியதும் சௌந்தர்யாவை வர வைக்கிறார்.

சௌந்தர்யாவும் அவரது கணவரும் வந்து ஏன்மா என்ன ஆச்சு? லட்சுமி திரும்பவும் அப்பாவைத் தேடி எங்கேயாச்சும் போயிட்டாளா என கேட்கின்றனர். இப்போ பிரச்சனை லட்சுமி கிட்டயிருந்து இல்ல ஹேமா கிட்ட இருந்து என கூறுகிறார். என்னாச்சு அவ என்ன சொன்னா என்ன கேட்க எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கங்கனு கேட்கிறா. அதைக் கேட்டதும் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?

அப்பா அம்மா யாருன்னு தெரியாம குழந்தை இங்கே இப்படி வளர்வது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏற்கனவே உங்க மகன் கட்டியிருக்க இந்தத் தாலியை என்ன செய்வது? விட்டா என்ன மன மேடையில் உட்கார வைத்து தாலி கட்ட வைத்து அட்சதை போட்டு ஆசிர்வாதம் பண்ணுவா போல, உங்களுக்கு சந்தோஷமா என கண்ணம்மா கேட்க அவர் கேட்டதற்கு நான் என்ன பண்ண முடியும் என சௌந்தர்யா சொல்ல இதெல்லாம் உங்களுக்குத் தெரியாம தான் நடக்குதா சும்மா பொய் சொல்லாதீங்க அத்தை என கூறுகிறார். முதல்ல இதுக்கு உங்க மகன் ஒத்துப்பாரா? இந்த விஷயம் தெரிந்த ஹேமாவையும் அவர் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவார்.

அவளும் அப்புறம் அப்பா இல்லாம வளரணுமா என கூறுகிறார். எனக்கு என்ன பண்றதுனே புரியல என்ன கலங்கி விட்டு வீட்டிற்கு கிளம்புகிறார் கண்ணம்மா. நாளை ஸ்கூல் முடிந்ததும் லட்சுமி நாம எங்க அப்பாவோட போய் இருக்க கூடாது என முடிவு செய்து ஹேமாவுடன் நானும் வீட்டுக்கு வருகிறேன் என கூறுகிறார். குமார் அண்ணா வந்தது அவரை அழைத்து போனை வாங்கி தன் அம்மாவிடம் நான் இன்னைக்கு வீட்டுக்கு வரமாட்டேன் நீ பயப்படாமல் சாப்பிட்டு கதவை பூட்டிட்டு தூங்கு என்ன கூறுகிறார். வரமாட்டியா எங்கே போற என்னை பண்ணுன்னு கேட்க நான் டாக்டர் அங்கிள் வீட்டுக்கு போறேன். அவரு ஹேமாவுக்கு நான் சொல்லித் வரப்போறாரு நானும் கத்துக்கப் போகிறேன் என கூறுகிறார். கண்ணம்மா அதெல்லாம் எங்கேயும் போகத் தேவையில்லை என கூறியும் நான் போவேன் என சொல்லி விட்டு போனை வைத்து விடுகிறார். பிறகு குமாரையும் அங்கிருந்து அனுப்பி விடுகிறார்.

சௌந்தர்யா வந்ததும் டூர் போவது பற்றி சொல்லி இருவருக்கும் பீஸ் கட்ட சொல்கிறார் ஹேமா. பின்னர் லட்சுமியின் வீட்டுக்கு வருவதாக சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார் சௌந்தர்யா.

இந்த பக்கம் வாய்தா வடிவுகரசி இடம் ஹேமா சொன்னது, லட்சுமி நடந்து கொள்வதையும் பார்த்து வருத்தப்படுகிறார். லட்சுமிக்கு ஒருவேளை விஷயம் தெரிந்து விட்டதோ என்னவோ என பயமாக இருக்கிறது என சொல்ல அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என வாய்தா வடிவுக்கரசி கூறுகிறார். இப்போதைக்கு போற போக்குல தான் போய் இந்த பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என சொல்கிறார். கண்ணமா என்ன செய்வது என தெரியாமல் குழம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 Bharathi Kannamma Serial Episode Update

Bharathi Kannamma Serial Episode Update