Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிம்புவுடன் நெருக்கமாக செல்ஃபி.. பாரதி கண்ணம்மா பரீனா வெளியிட்ட புகைப்படம்..

bharathi kannamma serial fareena photo with simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று நான்கு நாள் முடிவில் கிட்டத்தட்ட 28 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பாரதி கண்ணம்மா பரீனா தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது நடிகர் சிம்புவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஃபேன் கேர்ள் மூமென்ட் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர்களின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்