Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதி கண்ணம்மா வில்லி வெண்பாவுக்கு திருமணம்? அம்மா பார்த்த மாப்பிள்ளை யார் தெரியுமா

bharathi kannamma venba marriage

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா பாரதியை தனது கணவராக பல விதங்களில் முயற்சி செய்து வருகிறார். ஆனால் அது நடந்தபாடில்லை. பிரிந்து இருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்வதற்கான அறிகுறிகள் தான் சீரியலில் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் வில்லி வெண்பாவின் அம்மா சர்மிளா அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையை தொடங்கி இருக்கிறார். இன்றைய எபிசோடில் ஒரு மாப்பிள்ளை குடும்பத்தினர் வெண்பாவை பெண் பார்க்க வருகின்றனர்.

அதற்காக வெண்பா கல்யாண பெண் போல சேலைகட்டி ரெடி ஆகி வருகிறார். ஆனால் இறுதியில் அந்த மாப்பிள்ளையுடன் தனியாக அழைத்து பேசி தனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பது போல பொய்யாக காட்டி அந்த மாப்பிள்ளையை ஓட வைக்கிறார்.

இப்படி வெண்பா செய்யும் வேலைகளை பார்த்தால் இறுதியில் துர்கா தான் வெண்பாவுக்கு மாப்பிள்ளையாக வருவார் என தற்போது இணையத்தில் தகவல் பரவி வருகிறது.